காரைதீவு சமுதாயக் கல்லூரியின் பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீடு
தேவைப்பாடுடைய பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தியதாக சமுதாயக் கல்லூரிகளை உருவாக்கி அதனூடாக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது சமூகத்தின் வலுவூட்டலுக்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில், மனித நேய நம்பிக்கை நிதியத்தினரின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் இராமகிருஸ்ண மிஷன் அன்னை சாரதா மேம்பாட்டு பயிற்சி நிலையத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற VCOT Computer Learning Unit இன் Office management & IT முதலாவது தொகுதி பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீடு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினரால் நடாத்தப்பட்டது.
15 பயிலுனர்கள் தோற்றிய இம் மதிப்பீட்டு பரீட்சையில் அவர்களுக்கான Word, Excel, PowerPoint உள்ளடங்கலாக Office package அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதோடு பயிலுனர்களினால் அவர்கள் கற்றுக்கொண்ட விடயங்களின் அடிப்படையிலான நிகழ்த்துகை இடம்பெற்றது. அவ்வாறே, இரண்டாவது தொகுதிக்கான புதிய பயிலுனர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் இவ்வாறான செயற்பாடுகளைத் தேவைப்பாடுடைய பிரதேசங்களுக்குச் சென்று வழங்குவதன் மூலம் இளைஞர்கள், யுவதிகளை அடையாளப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வழிகாட்டலாகவும் அமையும்.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Final evaluation for trainees of Karaithivu Community College
Our Vivekananda College of Technology is taking various initiatives to strengthen the society by establishing community colleges focusing on needy areas and border areas below the poverty line.
Accordingly, the final evaluation of the first batch of VCOT Computer Learning Unit’s Office Management & IT, which is being implemented in the Karaitivu area under the Kalmunai Divisional Secretariat in Ampara District under the auspices of the Humane Trust Fund, was conducted by Vivekananda College of Technology.
In this evaluation exam, in which 15 trainees appeared, they were evaluated based on the Office package including Word, Excel, PowerPoint and a presentation was made by the trainees based on what they had learned. Similarly, it is noteworthy that new trainees for the second batch were also included.
Under the theme of empowering youth for change, providing such activities to areas of need will not only identify young men and women but also serve as a great guide for their future.