விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்..?
விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்..?

விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்..?

விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்..?

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித் நாணயக்கார இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனுராதபுரம் மாநகரசபைக்கு உட்பட்ட 30 முக்கிய இடங்களில் விசர்நாய் கடி ஒழிப்புத்திட்டம் ஆரம்பிப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்திலுள்ள சுமார் 80 சதவீதமான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்காத போதிலும், அனுராதபுரம் மாநகரசபை, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த இலக்கை அடைய முடிந்துள்ளதாக மருத்துவர் சமித் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

First district to completely eliminate rabies…?

Anuradhapura is set to become the first district in Sri Lanka to completely eliminate rabies.

Speaking at an event held in Anuradhapura, Dr. Samith Nanayakkara, Executive Committee Member of the Animal Welfare Association, made this statement.

Accordingly, a rabies eradication program has been launched at 30 key locations under the Anuradhapura Municipal Council.

Over the past two years, around 80 percent of the dogs in the district have been sterilized and vaccinated.

Meanwhile, Dr. Samith Nanayakkara pointed out that although the project did not receive government funding, the Anuradhapura Municipal Council, non-governmental organizations, and the public’s cooperation made it possible to achieve this target.