காட்டுத்தீயினால் 1000 ஏக்கருக்கும் அதிகளவான வனப்பகுதி தீக்கிரை

காட்டுத்தீயினால் 1000 ஏக்கருக்கும் அதிகளவான வனப்பகுதி தீக்கிரை

காட்டுத்தீயினால் 1000 ஏக்கருக்கும் அதிகளவான வனப்பகுதி தீக்கிரை

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த 12 ஆம் திகதி முதல் பரவிவரும் காட்டுத்தீயினால் 1000 ஏக்கருக்கும் அதிகளவான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், இராணுத்தினர், காவல்துறையினர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

More than 1000 acres of forest burned due to forest fire

The Sri Lankan military has been deployed to control the forest fire that broke out in the Nanberial forest area of ​​Balangoda.

It is reported that more than 1000 acres of forest area has been burnt due to the forest fire that has been spreading in the area since the 12th.

Police say that it is difficult to control the fire due to the drought and increased wind speed in the area.

In this situation, the military, police, disaster management officials and local people are continuing their efforts to bring the fire under control.