கூகுளின் அதிரடி நடவடிக்கை: நீக்கப்பட்ட யூடியூப் சேனல்கள்
தவறான தகவல்கள் மற்றும் ஒழுங்கற்ற பிரசாரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனம் தன்னுடைய யூடியூப் தளத்தில் இருந்து மொத்தம் 11,000-க்கும் அதிகமான யூடியூப் சேனல்ககள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நீக்க நடவடிக்கையில், சீனாவைச் சேர்ந்த 7,700-க்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஏராளமான யூடியூப் சேனல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த யூடியூப் சேனல்கள், அமெரிக்க அரசின் கொள்கைகள் மற்றும் மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் காணொளிகளை தொடர்ச்சியாக வெளியிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நீக்கப்பட்ட சேனல்கள் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்கியுள்ளன. இவை பெரும்பாலும் சீனாவின் அரசு அதிகாரிகளுக்கும், அதற்குத் தலைவர் ஸி ஜின்பிங்கிற்கும் ஆதரவாக உருவாக்கப்பட்ட தகவல் உள்ளடக்கங்களை தாங்கியிருந்ததாக கூகுள் கூறுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, ரஷ்ய மொழியில் இயங்கிய 2,000 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன. இவை ரஷ்ய அரசின் நிலைப்பாடுகளை வலியுறுத்தி, நேட்டோ, உக்ரைன், மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் கூகுளின் தகவல் பாதுகாப்பு மற்றும் விநியோகப் பொறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் அதிகரித்துவரும் பயன்பாடுகளைத் தவறாக பயன்படுத்தும் பிரச்சாரங்களை தடுக்கும் நோக்கத்தோடு, அரசியல் சார்பின்றி தளத்தை பராமரிக்க யூடியூப் தொடர்ந்து முயற்சித்து வருகிறது எனவும், அதற்கான சுயாதீன கண்காணிப்பு அணிகள் பணியாற்றி வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Google’s crackdown: YouTube channels removed
Google has removed more than 11,000 channels from its YouTube platform as part of its crackdown on misinformation and disinformation.
The removals include more than 7,700 Chinese channels and a number of Russian channels. Google said the channels were critical of US government policies and Western countries.
Most of the removed channels were in Chinese and English. Google said they were mostly pro-Chinese content, including content created to support Chinese government officials and President Xi Jinping.
A further 2,000 Russian-language channels were removed, which it said were critical of NATO, Ukraine and other Western countries, while also supporting Russian positions.
All of these actions were carried out by Google’s data security and distribution managers. A YouTube spokesperson said that YouTube is continuously working to maintain a politically neutral platform, with the aim of preventing campaigns that misuse its applications, which are increasing on the internet, and that independent monitoring teams are working to achieve this.