தேவநம்பிய தீசன் பற்றிய வரலாறு

தேவநம்பிய தீசன் பற்றிய வரலாறு

தேவநம்பிய தீசன் பற்றிய வரலாறு

இலங்கை வரலாற்றில் முதன்மையான பங்கு வகித்த மன்னர்களில் ஒருவர் தேவநம்பிய தீசன். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஆனுராதபுர அரசவையில் ஆட்சி செய்த இவர், இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றுள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில், இலங்கையின் சமூக, மத மற்றும் கலாசார தளத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

இலங்கையின் வரலாற்று நூல்களின் அடிப்படையில் மன்னர் ஆட்சி முறைமை முறையாக ஆரம்பமானது பண்டுகாபய மன்னன் காலத்தில் என்று கூறப்படுகின்றது. இந்த வரிசையில் பண்டுகாபய மன்னனிள் வாரிசான மூத்தசிவனுக்கு 10 புதல்வர்களும் 2 புதல்வியரும் இருந்தனர். மரபுரிமையின் பிரகாரம் தந்தைக்கு பின்பு தலை மகனையே ஆட்சியை தொடர்ந்திருக்க வேண்டும். எனினும் இங்கு அவ்வாறு நிகழவில்லை. அநுராதபுர ஆட்சியின் வரலாற்றில் அவருக்கிணையான அமைதியான ஆட்சியை பிறிதொரு மன்னரும் மேற்கொண்டதில்லை. 60 வருடங்களாக தன்னுடைய ஆட்சியில் நிலவிய அமைதியும், சௌபாக்கியமும் தனக்கு பின்னும் தொடர்வதற்கு உரியதோர் அரசியல் வாரிசை ஆட்சியில் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டிருந்ததை மூத்தசிவன் உணரத்தலைப்பட்டார். தன் மைந்தருள் திறமையும் அறிவும் மிக்கவனான தீசன் எனும் இரண்டாவது புதல்வனை அடுத்த அரசனாக பிரகடனம் செய்து மூத்தசிவன் தன்னுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக்கொண்டு இறையடி சேர்ந்தார்.

கி.மு.307 தீசன் மன்னனாக பட்டாபிசேகம் செய்து வைக்கப்பட்டார். தீசன், முகலன் வம்சத்தைச் சேர்ந்தவர். இவர் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளதுடன் இவரது ஆட்சி காலத்தில் மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இவரது ஆட்சியின் போதே இலங்கை தீவின் பல பகுதிகளிலும் சிறப்பான நன்னிமித்தங்கள் தோன்றின. பல்லாண்டுகாலமாக நிலமகளின் மடியில் புதையுண்டிருந்த உலோகங்களும், மாணிக்கங்களும் தன்னியல்பாக வெளிப்பட்டன. செல்வங்கள் நிறைந்த பெரும் நாவாய் ஒன்று சூறைக்காற்றால் அடிக்கப்பட்டு சிதைவுண்டு இலங்கையின் கரைகளை அடைந்தது. தீவின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து தெற்கு திசையில் இரண்டு யோஜனா தொலைவில் அமைத்திருந்த சத்தாமலை எனும் பகுதியில் தேர்த்துலாவின் தடிப்பை கொண்ட தங்க, வெள்ளி, பலவர்ண பூக்களின் நிறத்தில் விளைந்த மூன்று பெரும் மூங்கில்கள் தோன்றின. கயா, ஹாயா, ரதா, அமலகி, அங்குலி, வைத்தக, கும்பக், வளைய, பரகதிக எனும் எண்வகை முத்துக்களும் ஒரே நாளில் கரையொதிங்கின. இதனை கண்ட மக்கள் இவ்வனைத்து செல்வங்களையும் ஒன்று திரட்டி அனுராதபுரத்திற்கு கொண்டுவந்து மன்னன் தீசனுக்கு அன்பளித்தனர்.

அவற்றை பெற்றுக்கொண்ட மன்னன் அவற்றின் மதிப்புணர்ந்து தனது உயிர்த்தோழனும் இந்தியாவின் பெரும் சக்கரவர்த்தியான அசோக சக்கரவர்த்திக்கு அவற்றை பரிசாக வழங்க முடிவு செய்தான். இதன் விளைவாக அசோகரை சந்தித்து பரிசில்களை கையளிப்பதற்காக விசேட தூதுக்குழு ஒன்று ஒதுக்கப்பட்டது. அசோகருக்கும் தனக்கும் நிலவிய நட்பினை மனதில் நிறுத்தி, அக்குழுவின் தலைவனாக தன்னுடைய சொந்த மருமகனும் முதன்மை அமைச்சனுமான மகா அரிட்டனை நியமித்தார். மேலும் அரசின் பிரதம புரோகிதர், அரசின் தனாதிகாரி, அமைச்சர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவாக அது அமைந்தது. மூவகை இரத்தினங்கள், சத்தாமலையில் இருந்து பெறப்பட்ட அரசுதேருக்கான மூன்று மூங்கில் துலாக்கள், வலம்புரி சங்குகள், எண் வகை முத்துக்கள் மற்றும் மேலும் பல செல்வங்களுடன் தூதுக்குழுவானது ஜம்புகோளப்பட்டினத்தின் (தற்போதைய யாழ்ப்பாணம்) துறையில் இருந்து பயணப்பட்டனர்.

பதினான்கு நாட்கள் பயணத்தை தொடர்ந்து, மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகர் பாடலிபுத்திரத்தை அடைந்தனர் தீசனின் தூதுக்குழுவினர். லங்காபுரியில் இருந்து தன் அன்பு நண்பன் அனுப்பிய அனைத்து பரிசல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்ட அசோக சக்ரவர்த்தி தூதுக்குழுவினர்க்காக தனிமாளிகை ஒன்றை ஒதுக்கி விருந்தினரை சிறப்பாக கவனித்து கொண்டார். அடுத்துவந்த நாட்களில் தன்னுடைய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மகா அரிட்டனுக்கு ‘சேனாபதி’ என்ற பட்டத்தையும், பிராமனருக்கு ‘புரோகிதர்’ பட்டத்தையும், தனாதிகாரிக்கு ‘தண்டநாயகன்’ பட்டத்தையும், அமைச்சருக்கு ‘சேதி’ பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். ஐந்து மாத காலம் பாடலிபுத்திரத்தில் தங்கிய அரிட்டனின் குழுவினர் நாடு திரும்பும் போது அசோகர் தீசனுக்காக பட்டாபிஷேக வஸ்துக்களை பரிசில்களாக அனுப்ப முடிவு செய்தார். அதன் பிரகாரம் யாக் மாட்டின் மயிரால் செய்யப்பட்ட பீலிவிசிறி, மகுடம், உடைவாள், தங்கப்பாதுகைகள், வெண்குடை, தலைப்பாகை, காதணிகள், சங்கிலிகள், பொற்குடங்கள், சந்தனக்கட்டைகள், உயர் பட்டாலான துவாய்கள், நாகர்களிடம் இருந்து பெற்ற ஆபரணங்கள், வாசனைத்தைலங்கள், செம்மண், கங்கைநதி நீர், அனோத்தை ஏரி நீர், தங்கப்பாத்திரங்கள், மதிப்புமிக்க அம்பாரி, அரிய மூலிகைகள், பழங்கள், நூற்றியறுபது மூட்டை மலையரிசி என பல்வேறு பரிசில்கள் தயார்செய்யப்பட்டன. இவற்றுக்கு மேலாக தீசனுக்காக மௌரிய அரசகுலத்தில் பிறந்த இளவரசி ஒருத்தியும் பரிசாக வழங்கப்பட்டது அவர்கள் நட்பின் உறுதியை வெளிப்படுத்தி காட்டியது. இந்த பரிசில்களுடனும், தீசனுக்கான ஒரு தனிப்பட்ட செய்தி ஓலையுடனும் அரிட்டனின் குழு தாமிரலிப்தி (தமியிற்றியா) துறையில் இருந்து புறப்பட்டு கடல்வழியாக தாய்த்தேசம் திரும்பினார்கள்.

பாடாலிபுரத்தில் இருந்து மீண்ட அரிட்டன் தீசனை சந்தித்து அசோகரின் ஓலையை கையளித்தான். “நான் புத்தரின் அடிமை, அவரின் தர்மத்திலே சரணடைந்தவன். மனிதருள் சிறந்தவனே! நீயும் புத்தம்,சங்கம்,தர்மம் எனும் மும்மணிகளை ஏற்று அவரிடம் சரணடைவாயாக”

கலிங்க யுத்தத்தின் பின் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த அசோகர் பௌத்த மதத்தை தழுவினார். அது தன்னளவில் ஏற்படுத்திய பல மாற்றங்களை உணர்ந்து பௌத்தத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் பலநாடுகளுக்கு தர்ம மஹா மாத்ராக்கள் எனும் தூதுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் ஒரு அங்கமாகவே இலங்கைக்கான இந்த செய்தியும் காணப்பட்டது. உடனடியாக எந்த முடிவையும் எடுக்க விழையாத தீசன் இதுகுறித்தான ஆலோசனையை தள்ளிவைத்தான். அசோகரின் பரிசில்களை கொண்டு மீண்டும் மாகுடதாரண விழாவை நடத்த நன்னாள் குறிக்கப்பட்டது. மௌரிய குலா இளவரசியை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பின்பு, அசோகர் தீசனுக்கு வழங்கிய ‘தேவநம்பிய’ என்ற பட்டதுடன் மௌரிய முறையின் படியே முடிசூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் ஆட்சிக்கட்டில் முதல் முறையாக மௌரிய அரசவம்சம் நிலைகொண்டது இந்நிகழ்வுக்கு பின்னேயாகும். அன்றில் இருந்து அவன் தேவநம்பிய தீசன் எனவே அனைவராலும் அறியப்பட்டான்.

வைகாசி மாத பௌர்ணமி தினமொன்றில் தேவநம்பிய தீசன் நாற்பதாயிரம் பேர்கொண்ட பெரும் பரிவாரத்துடன் மிசாகபர்வதத்தின் (மிகிந்தலை) அடிவாரத்திற்கு வேட்டையின் பொருட்டு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது மான் ஒன்று மன்னனின் கண்களில் அகப்பட அதனை துரத்திக்கொண்டு சென்றார் மன்னன். அந்த மான் அரசனின் கைவில்லில் இருந்து தன்னுயிரை காக்க அம்மான் அம்பத்தாலா சிகரத்தை அடைந்தது. இருந்தாலும் அம் மானை பின்னால் மன்னன் துரத்திச்சென்றான். இறுதியில் மான் தன்னுயிரை காக்குமாறு கனிந்த பார்வையும் காவி உடையும் தரித்த பிக்குவின் காலடிகளை அடைந்து அபயம் கோரியது அம்மாயமான். சிகரத்தை அடைந்த அரசனை நோக்கி ‘தீஸா! என்னருகில் வா’ என்றோர் குரல் கட்டளையிட்ட்டது. இதனை கேட்ட அரசன் தன் வில்லை குரல் வந்த திசை நோக்கி உயர்த்தினான். வதனத்தில் முறுவலுடன் ‘நாங்கள் தர்மராஜாவாகிய அசோகரின் தூதுவர்கள். உன்மீது கொண்ட கருணையின் விளைவால் இங்கு வந்தோம்’ என கூறினார் அந்த பிக்கு.

அவர் தன்னுடைய மதிப்பிற்குரிய நண்பனின் புதல்வனான மகிந்தர் என்பதை அரசன் அறிந்துகொண்டான். மிசாகபர்வதத்தின் உச்சியில் மன்னனின் அறிவின் திறமையை கண்டறிய மகிந்தர் சிலவினாக்களை தொடுத்தார். அரசன் அவற்றுக்கு அளித்த விடைகளால் திருப்தி அடைந்து கள்ளபத்தி பதோபம் என்ற சூத்திரத்தை மன்னனுக்கு உபதேசம் செய்தார். அந்நாளில் அரசனின் பரிவாரத்தில் இருந்த நாற்பதாயிரம் பேரும் பௌத்தமத்தை ஏற்றுக்கொண்டனர்.

மறுநாள் மகிந்தரும் அவரது குழுவினரும் அநுராதபுரத்தை வந்தடைந்தனர். பிற்காலத்தில் அவர்கள் காலடிபதிந்த இடத்தில் பிற்காலத்தில் பத்மன சைத்தியம் என்ற விகாரை அமைக்கப்பட்டது.

மேகவன வளாகத்தில் மகிந்ததேரர் குறித்து தந்த இடங்களில் மகாவிகாரை, தூபாராம மற்றும் ஸ்ரீ மகாபோதி விருட்சம் ஆகியவை அமைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கின. மகாமேகவனம், மகாவிகாரை வளாகம் என மாறியது.

மழைக்காலத்தை கழிக்கும் எண்ணத்துடன் சேத்திய பர்வதத்தில் தங்கியிருந்த மகிந்ததேரரை கண்டு அரிட்டனும் அவனது 55 தோழர்களும் பிக்குகளாக அபிடேகம் செய்துகொண்டனர். இலங்கையின் முதல் பிக்குசாசனம் அமைக்கப்பட்டது. அங்கு பிக்குகள் மழைக்காலத்தை கழிக்க 32 கற்குகைகள் கட்டப்பட்டது. சில காலத்தில் மகிந்தரின் முயற்சியால் கயாவில் இருந்து புத்தரின் தாடையெழும்பு, பிச்சைப்பாத்திரங்கள் என்பன இலங்கைக்கு பெறப்பட்டன. புத்தரின் தாடையெழும்பை கொண்டு இலங்கையின் முதல் தாதுகோபமான தூபாராம தூபி அமைக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

History of Devanampiya Theesan

Devanampiya Theesan is one of the kings who played a prominent role in the history of Sri Lanka. He ruled at the Anuradhapura court in the 3rd century BC and has gained an important place in history by introducing Buddhism to Sri Lanka. During his reign, great changes took place in the social, religious and cultural landscape of Sri Lanka.

Based on the historical texts of Sri Lanka, it is said that the monarchy system formally began during the reign of King Pandugabhaya. In this line, King Pandugabhaya’s successor, Uthusivan, had 10 sons and 2 daughters. According to the law of succession, the eldest son should have succeeded his father. However, this did not happen here. No other king in the history of the Anuradhapura kingdom has ruled as peacefully as he did. Uthusivan realized that the time was approaching for him to accept a suitable political successor to continue the peace and prosperity that had prevailed in his reign for 60 years. The second son, Theesan, who was more talented and knowledgeable than his sons, was declared the next king and Utthusaiva released him from all his responsibilities and joined the gods.

Theesan was crowned as king in 307 BC. Theesan belonged to the Mughal dynasty. He ruled with Anuradhapura as his capital and it is said that the people lived a peaceful life during his reign. Also, during his reign, special auspicious events occurred in many parts of the island of Sri Lanka. Metals and gems that had been buried in the lap of the earth for many years spontaneously emerged. A large ship full of wealth was hit by a storm and wrecked and reached the shores of Sri Lanka. In the area called Satthamalai, which was located two yojanas south of the island’s capital, Anuradhapura, three large bamboos, the thickness of a thertula, grew in the color of gold, silver and multi-colored flowers. The eight types of pearls, namely, Gaya, Haya, Ratha, Amalaki, Anguli, Vaithaka, Kumbhaka, Vanga, and Parakathika, were washed ashore on the same day. Seeing this, the people gathered all these treasures together and brought them to Anuradhapura and presented them to King Theesa.

The king, who received them, realized their value and decided to present them as a gift to his lifelong friend and the great emperor of India, Emperor Ashoka. As a result, a special delegation was assigned to meet Ashoka and present the gifts. Keeping in mind the friendship that existed between Ashoka and himself, he appointed his own son-in-law and chief minister, Maha Arithan, as the leader of the delegation. Furthermore, the delegation consisted of a total of four people, namely the chief priest of the state, the state treasurer, and a minister. The delegation set out from the province of Jambukolapattinam (present-day Jaffna) with three kinds of gems, three bamboo scales for the royal chariot obtained from Chattamalai, Valampuri conch shells, a number of pearls and many other riches.

After a journey of fourteen days, the delegation of Theesa reached Pataliputra, the capital of the Mauryan Empire. Emperor Ashoka, who willingly accepted all the gifts sent by his dear friend from Lankapuri, reserved a separate palace for the delegation and took special care of the guests. In the following days, after consulting with his ministers, he honored Maha Aritan with the title of ‘Senapati’, the Brahmin with the title of ‘Purohithar’, the Thanathikari with the title of ‘Dandanayakan’ and the minister with the title of ‘Sethi’. When the group of Ariton, who had stayed in Pataliputra for five months, returned home, Ashoka decided to send coronation gifts for Theesan. Accordingly, various gifts were prepared, such as a yak-hair fan, a crown, a sword, gold bracelets, a white umbrella, a turban, earrings, chains, gold pots, sandalwood sticks, high-grade duais, ornaments obtained from the Nagas, fragrant oils, red clay, Ganga river water, Anothai lake water, gold vessels, valuable ambari, rare herbs, fruits, and one hundred and sixty bundles of mountain rice. In addition to these, a princess born in the Mauryan dynasty was also given to Theesan as a gift, demonstrating the firmness of their friendship. With these gifts and a personal message for Theesan, Ariton’s group set out from the Tamiralipti (Tamiyitriya) region and returned to their homeland by sea.

After recovering from Patalipuram, Ariton met Theesan and handed over Ashoka’s message. “I am a slave of the Buddha, a devotee of his Dharma. O best of men! You too, having accepted the three jewels of the Buddha, the Sangha and the Dharma, should surrender to him.”

After the Kalinga War, Ashoka, who had been deeply distressed, embraced Buddhism. Realizing the many changes it had brought about in himself, ambassadors called Dharma Mahamathras were sent to many countries with the aim of spreading Buddhism throughout the world. This message to Sri Lanka was also seen as a part of this.