Hot Weather to Continue
Hot Weather to Continue

வெப்பமான வானிலை தொடரும்

Hot Weather to Continue நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Hot Weather to Continue

The Department of Meteorology has announced that the prevailing hot weather conditions across the country are expected to continue.

Dry weather is likely to dominate most parts of the island.

However, after 2:00 PM today, showers or thundershowers may occur in some areas of the Sabaragamuwa Province and North Western Province, as well as in parts of the Galle District and Matara District.

In the morning, misty conditions may be experienced at some locations in the Central Province and Sabaragamuwa Province, along with parts of Galle and Matara districts.

During thundershowers, temporary strong winds may occur, and the public is advised to take necessary precautions to minimize damage caused by lightning.