பயிர்களுக்கு தேவையான நுண்மூலகங்கள் தயாரிப்பது எப்படி?
சுய சார்பாக, இயற்கையான முறையில் பயிர்களுக்கான நுண்மூலகங்கள் (Micro Nutrient) தயாரிப்பது எப்படி என ஓர் குறிப்பினை காணக்கிடைத்தது. விவசாயம் செய்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இங்கு பகிர்கிறோம். முடியுமானவர்கள் முயற்சி செய்து பார்ப்பதுடன் எமது நாட்டிற்கு ஏற்றவாறு இதனை மேம்படுத்தவும் முயற்சிக்கலாம்.
1L Waste De Composer (WDC) இனை, சர்க்கரை/ கருப்பட்டி 2 Kg மாவாக அரைத்து 17 லீட்டர் நீரில் நன்கு கலந்து காற்றுப்புகாமல் மூடி வைத்தால் 7 நாட்களில் Activated WDC தயாராகிவிடும். இக்கலவைக்கு 4மடங்கு நீர் சேர்த்து மொத்தம் 100 லிட்டர் கரைசல் தயாரித்து அதிலிருந்து 20 L இனை எடுக்கவும்.(மீதி 80 L இனை கொம்போஸ் தயாரிப்பு அல்லது மேலும் நுண்மூலககரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம் )
இவ் 20 L ஐதாக்கிய activated WDC யுடன்,
100 கிராம் இரும்பு ஆணி
250 கிராம் செம்பு தகடு/கம்பி.
(கீழுள்ளவற்றில் உங்கள் பிரதேசத்தில் கிடைக்கும் ஏதாவது 5 வகை பருப்புக்கள் மற்றும் 3 வகை எண்ணை வித்துக்கள் )
உளுந்து மா 1/2 kg
சோயா மா 1/2 Kg
சோள மா 1/2 kg
கெளபி மா 1/2 kg
கடலை மா 1/2 kg
கொள்ளு மா 1/2 kg
பயறு மா 1/2 kg
கடுகு மாவாக்கியது 1/2 kg
எள்ளு மா 1/2 kg
முடியுமானால் சூரியகாந்தி விதை 1/4 kg
ஆமணக்கு விதை மா 1/2 kg
மூடியுள்ள பிளாஸ்டிக் பரலில் ஏற்கனவே நாம் தயாரித்து வைத்திருக்கும் WDC 20 லீட்டரை இதில் ஊற்ற வேண்டும். மேலே கூறியுள்ள அனைத்து மாவுகளையும் ஒன்றாக கொட்டிக்கலந்து சுத்தமான தடியால் நன்கு கலக்க வேண்டும்.
பின்னர் 100 கிராம் இரும்பையும் 250 கிராம் செம்பு (Copper) உலோகத்தை இதில் போட வேண்டும்.
2 கிலோ தூளாக்கிய சர்க்கரை அல்லது கருப்பட்டி போட்டு நன்கு கலந்து, சுத்தமான சணல் சாக்கை பரல் மேல் போட்டு பரலின் வாயினை இறுக்கி கட்டிவிடவும்.
10 நாட்கள் கழித்து, இதில் 1 லீட்டர் கரைசலை, 5 லீட்டர் நீருடன் எனும் அளவில் கலந்து நிலத்தில் தெளிக்கும் போது பெரும்பாலான நுண்ணூட்டச் சத்துப்பற்றாக்குறைகள் நீங்கும்.
மேலதிக விபரங்கள்
CSJ Agri
076 225 0017
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How to prepare micronutrients needed by crops?
We found a method to prepare micro nutrients in a natural way, which will be very useful for farmers. Those who can, please try it and also work on improving it to suit our country’s conditions.
Step 1 – Preparing Activated WDC
- Take 1L of Waste Decomposer (WDC).
- Grind 2 kg of jaggery/sugar into powder and mix it well with 17L of water.
- Store it in an airtight container.
- In 7 days, Activated WDC will be ready.
From this, mix with 4 times water to make a total of 100L solution. Out of this, take 20L (the remaining 80L can be used for composting or preparing more micro nutrient solution).
Step 2 – Ingredients to be mixed with 20L Activated WDC
- 100g iron nails
- 250g copper plate/wire
(Choose 5 types of pulses and 3 types of oilseeds available in your area, from the list below)
- Black gram flour – ½ kg
- Soybean flour – ½ kg
- Maize flour – ½ kg
- Cowpea flour – ½ kg
- Chickpea flour – ½ kg
- Horse gram flour – ½ kg
- Green gram flour – ½ kg
- Mustard seed flour – ½ kg
- Sesame seed flour – ½ kg
- Sunflower seed – ¼ kg (if available)
- Castor seed flour – ½ kg
Step 3 – Preparation
- Pour the 20L Activated WDC into a clean plastic barrel.
- Add all the above-mentioned flours and mix thoroughly with a clean stick.
- Add 100g iron and 250g copper pieces into the mixture.
- Add 2 kg powdered jaggery or sugar and mix well.
- Cover the barrel mouth with a clean jute sack and tie it tightly.
Step 4 – Usage
- After 10 days, take 1L of this solution and dilute with 5L of water.
- Spray on the soil. This will help overcome most micro-nutrient deficiencies in crops.
For more details:
CSJ Agri
📞 076 225 0017