இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி?
இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக செய்வது எப்படி?

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாகசெய்வது எப்படி? : தொடர் 3

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக
செய்வது எப்படி? : தொடர் 3
🌱🌱🌱🌱🌱🌱🌱
அடுத்த சில அத்தியாயங்களில், நாம் சிறிய அளவிலான தோட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் செய்வது பற்றிப் பார்ப்போம். சிறியதோ பெரியதோ, எந்த முயற்சியானாலும் திட்டமிடலே மிகவும் முக்கியமானது.

முதல் படியான மண் பரிசோதனையினை செய்ய முடியாவிட்டாலும், நாம் செய்கை பண்ணும் மண்ணின் தன்மை பற்றிய அடிப்படை அறிவு மிகவும் அவசியம். இதனை அயலில் உள்ள அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடமிருந்தாவது அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணின் அமில காரத்தன்மை, ஊட்டசத்துக்கள், போன்றவற்றை ஓரளவுக்கு விளங்கிக்கொள்ளமுடியும்.

இரண்டாவது, தரையின் உயர வேறுபாடு மற்றும் நீர் வழிந்தோடும் பாங்கினை அறிந்திருந்தல் அவசியம். இதனை பெரிய அல்லது சிறிய இடமாயினும், செலவின்றி Google Earth App மூலம் நாமே கணிப்பிட்டுக் கொள்ளமுடியும். ( ChatGPT அல்லது Deep Seek இல் Google Earth பயன்படுத்தி ஒரு இடத்தில் தரைத்தோற்ற உயர வேறுபாடு அளவிடுவது எப்படி? என்று கேட்டு அறிந்து, செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.)
மேற்கூறிய இரண்டு படிகளும் எந்த வகைப்பயிர்கள் எங்கு நடப்பட வேண்டும் என்பதனை தீர்மானித்துக்கொள்ள உதவும்.

அடுத்தது பாரம்பரிய விதைகள். இலங்கையில் இவை சற்று கடினமாயினும் முடியாததல்ல.
பன்னிரண்டு வருடங்கள் முன்பு மட்டக்களப்பில் உள்ள இயற்கை விவசாய ஆர்வலர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் “ஒருமுறை மட்டும் பலன்தரும் விதைகளை” பயன்படுத்தி நடப்பட்ட சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள பப்பாளித் தோட்டத்திற்கு மாட்டெரு, இயற்கை கரைசல்கள் கொடுத்து வளர்த்தனர். ஒவ்வொரு மரமும் நெடுநெடுவென பத்து பதினைந்து அடிகள் உயரம் வளர்ந்ததுடன் மிகவும் குறைந்தளவிலேயே காய்த்து நட்டமுமடைந்தனர். உண்மையில் இவ்வாறான “ஒருமுறை மட்டும் பலன்தரும் விதைகளில்” முளைக்கும் இனங்கள் இரசாயன உரங்களுக்கே உயர்விளைச்சலைக் கொடுக்கும் என்பதை திட்டமிடலின் போது அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கவேண்டும்.

உண்மையில் சில சமயங்களில் நாம் உண்டுவிட்டு விதைகளை எறிந்தவுடன் குப்பைமேடுகளில் தானாக முளைத்து பயன் தரும் உள்ளூர் பப்பாளி, அன்னமுன்னா, வட்டுக்காய், பூசணி, மிளகாய், அவரை, தக்காளி, கொத்தவரை, வெண்டி, பாகல், வெள்ளரி, கக்கரி, அவரை, பீர்க்கு, வற்றாளை, இராச வள்ளி, நாடங்காய் போன்றவை எந்தப்பராமரிப்புமின்றி பலன் தந்து கொண்டிருக்கும். மேலும் குப்பைக்கீரை, மரப்பசளி, திராய், பொன்னாங்கணி, வள்ளல், இலட்சகட்டை / சண்டி இலை, தவசி முருங்கை, தூதுவளை, அகத்தி போன்ற கீரைகள் கூட புழுத்தாக்கமின்றி செழிப்பாக பரவிக்காணப்படும்.

உறுதிப்படுத்தப்பட்ட பாரம்பரிய விதைகள் கிடைக்காத பட்சத்தில், இயற்கை விவசாயம் செய்ய திட்டமிடும் நாம் முதலில் செய்ய வேண்டியது, இயற்கைச் சூழலில் போட்டி போட்டு வளரக்கூடிய மேற்கூறிய வீரியமான விதைகளை, தண்டுகளை, பதியங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பயிரிடலாகும்.

இயற்கையை உன்னிப்பாக கவனிக்கும் பட்சத்தில் நிச்சயம் இவற்றில் சிலவேனும் எமது கண்களுக்குப் புலப்படும். (இவற்றுக்கு சந்தை வாய்ப்பு இல்லையே என்று எம்மில் சிலர் சந்தேகிக்கலாம். பொதுச்சந்தையை மட்டுமே நம்பியிராது இயற்கை விளைபொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை எப்படி உருவாக்குவது என்பதை தொடர்ந்து வரும் பதிவுகளில் கூறுகிறோம்.)

மேற்கூறிய வீரியமான விதைகள் கிடைக்காத பட்சத்தில், நீண்ட காலம் தொடர்ச்சியாக செய்கை பண்ணப்படும் இடங்களுக்கு நேரடியாக சென்று, அந்தப்பகுதி விவசாயிகள் முன்னைய அறுவடையில் சேகரித்த விதைகளை இரசாயன மருந்தில் அமிழ்த்தி பரிகரணம் செய்ய முன்னரே அவ்விதைகளை சேகரித்தல். (உ+ம்: மட்டுவில் முட்டிக் கத்தரி, களுதாவளை மிளகாய், மற்றும் கத்தரி, மண்டூர் கீரை, யாழ்ப்பாண முருங்கை, மொட்டைக்கருப்பன், சீனட்டி போன்ற நெல்லினங்கள், சிறுதானியங்கள் இன்னும் பிற) பாரம்பரிய, வீரியமான விதைகளன்றி, “ஒருமுறை மட்டும் பலன்தரும் விதைகளை” பயன்படுத்தும் போது நாம் நிச்சயம் பூச்சி, பீடைகளுடன் கடுமையாக போராடுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டி இருக்கும்.

இவ்வாறான இயற்கை முறையில் வளரும் தாவரங்களில் விளைச்சல் குறைவாயினும், உண்மையில் “ஒருமுறை மட்டும் பலன்தரும்” இனங்களில் ஏற்படும் நோய்த்தாக்கத்தை குணப்படுத்த எமக்கு ஏற்படும் செலவுடன் மற்றும் பராமரிப்புக்கான நேரவிரயத்துடன் ஒப்பிடுகையில் இது இலாபகரமானதே. இதனை அனுபவத்தில் சொல்கிறோம்.

(தொடரும்)

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாக
செய்வது எப்படி? : தொடர் 2 👇👇👇👇👇👇

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

How to Successfully Practice Natural Farming in Sri Lanka? : Part 3
🌱🌱🌱🌱🌱🌱🌱

In the upcoming chapters, we will look at small-scale gardens and home gardens. Whether big or small, planning is the most important factor in any effort.

Even if we cannot carry out a formal soil test, having a basic understanding of the soil type where we plan to cultivate is essential. This knowledge can at least be gathered from experienced farmers in the neighborhood. Through this, we can roughly understand soil acidity, nutrient content, and related aspects.

Secondly, it is crucial to know the differences in land elevation and the natural flow of water. This can be assessed, whether in a large or small plot, without cost, simply by using the Google Earth App. (Ask ChatGPT or DeepSeek: “How to use Google Earth to measure land elevation differences in a specific location?” Try it and practice for yourself.)

The above two steps will help determine which crops should be planted in which parts of the land.

Next comes traditional seeds. In Sri Lanka, obtaining them can be somewhat difficult, but not impossible.

For example, about twelve years ago, some natural farming enthusiasts in Batticaloa cultivated a papaya field of about one acre using imported hybrid seeds that yield only once. They applied cow dung and natural liquid fertilizers. Although the trees grew tall (10–15 feet), they produced very few fruits and the entire effort resulted in a loss. In reality, such “single-yield” hybrid varieties are designed to respond to chemical fertilizers, not natural methods. This is something that should have been realized during planning.

In fact, sometimes seeds thrown away after eating fruits sprout on garbage heaps and grow into productive local varieties of papaya, pineapple, bottle gourd, pumpkin, chili, long beans, tomato, cluster beans, okra, bitter gourd, cucumber, ridge gourd, snake gourd, yam, and country brinjal without any care at all. Similarly, leafy vegetables like kupai keerai (amaranthus spinosus), marapasali, tharai, ponnangkanni, vallal, ilachakkattai (sandy ilai), thavasi murungai, thoothuvalai, agathi and others thrive naturally without pest problems.

If certified traditional seeds are not available, the first step for those of us planning natural farming is to identify and cultivate these hardy, naturally competitive seeds, stems, and cuttings.

If we observe nature carefully, we will surely notice some of them around us. (Some may doubt: “But won’t these crops have no market value?” Do not worry—we will discuss in future chapters how to create specific market opportunities for natural farm produce instead of depending only on the general marketplace.)

If such hardy seeds are not found, then we must directly approach places where farming has been practiced continuously for years and collect the seeds that farmers have saved from previous harvests before they are treated with chemical fungicides or pesticides.
(Examples: Muttikaththari brinjal from Mattuvil, Kaluthavalai chili and brinjal, Mandur spinach, Jaffna drumstick, Mottaikkarupan paddy, Seenatti paddy, millet varieties, and many more.)

Without such traditional, hardy seeds, if we depend on “single-yield hybrid seeds,” we will inevitably have to prepare for a constant struggle against pests and diseases.

Although crops grown naturally may yield less, when compared to the expenses and time wasted in managing pest outbreaks in hybrid varieties, natural farming proves to be more profitable in the long run. This we can say from experience.

(To be continued)