இயற்கை விவசாயத்தினை இலங்கையில் வெற்றிகரமாகசெய்வது எப்படி தொடர் 6
🌱🌱🌱🌱🌱🌱🌱
பல அடுக்குப் பயிர்ச்செய்கை பல விதங்களில் இயற்கை விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானது.
அவற்றில் பொருளாதார ரீதியாக முக்கியமானது, விவசாயியின் வருமானம் கணிசமாக அதிகரிப்பது. இது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
நாம் முன்னரே கூறியபடி உங்கள் விளை பொருட்களுக்கு ஓர் கேள்வி (Demand) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தோம். இதனையும் பல அடுக்கு பயிர்செய்கையுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
ஒரு தோட்டத்தினை தொடங்க திட்டமிடும்போது, ஒன்றிய வாழ்க்கைக்குரிய பயிர்கள் பற்றிய அறிவுடன் (உ+ம் : கத்தரி / புதினா/ ராபு) , உத்தேச / நடைமுறைக்கு பொருந்தக்கூடிய நாள் வருமானம் (கீரைகள்), இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கான வருமானம் (வெண்டி) , வார வருமானம் (கத்தரி), மூன்று மாதத்திற்கான வருமானம் (பயறு, பூசணி) , 6 – 12 மாதத்திற்கான வருமானம் (பப்பாளி, வாழை, கொய்யா) , சில வருடங்களின் பின்னரான நிலைத்த வருமானம் (மா, தென்னை) ஆகியவற்றுடன் மழைக்கால வருமானம் ஆகியவற்றை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
நாள் வருமானத்தினை திட்டமிடும் பொழுது ஆக குறைந்தது ஏழு கீரை வகைகளை ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அறுவடை செய்யும் முகமாக திட்டமிட்டு, வாரம் தோறும் தொகுதி தொகுதியாக விதைக்க / நட வேண்டும்.
1/4 ஏக்கர் அல்லது 4 பரப்பு அளவுள்ள நிலத்தில் விளைவித்து முதன் முதலில் சந்தைப்படுத்தும் பொழுது ஆகக்கூடியது கீரைகள் ஒவ்வொன்றிலும் 10 கட்டுகள் மற்றும் ஒவ்வொரு வகைகளிலும் அதிகபட்சம் 5 கிலோ மரக்கறி என்ற அளவிலேயே சந்தைப்படுத்த வேண்டும்.
அதிகமாக சந்தைப்படுத்தி விளை பொருட்களை விரயமாக்க வேண்டாம். ( சில மாதங்கள் பின்பு சந்தை நிலைமையை அவதானித்து தேவை உள்ளவற்றை சற்று அதிகரிக்கலாம்.) இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு நாளும் எமது நிலையான வருமானத்தினை பேண முடியும்.
இலங்கையில் தற்போதுள்ள நிலையில் ஒரு கட்டுக்கீரையினை 70 ரூபாய்க்கும் வல்லாரை, தூதுவளை போன்ற இலை கறிகளை 50 ரூபாய்க்கும் சந்தைக்கு கொடுக்க முடியும். முடிந்தால் துப்பரவு செய்து விற்பதன் மூலம் இன்னும் மதிப்பு கூட்டப்படும்.
இதனை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் கீரைகளில் மட்டுமே 1/4 ஏக்கரில் தினமும் 2000 அல்லது 3000 ரூபாய் நிலையான வருமானம் ஈட்ட கூடியதாக இருக்கும். இதனைக் கொண்டு ஓரளவுக்கு அன்றாட குடும்ப செலவுகளை நிவர்த்தி செய்யலாம். மேலதிகமாக வரும் வார,மாத, மூன்று மாத, ஆறு மாத வருமானங்களை சேமிப்பிற்கு அல்லது மழைக்கால தயார்படுத்தல்களான வளர்ப்பு பை அல்லது பொலிரனல் (Poly tunnel) போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
20 பேர்ச் / 2 பரப்பு அளவு நிலத்தில் மாதாந்தம் 40 முதல் 60 ஆயிரம் ரூபாய் ஈட்டும் வினைத்திறனான ஒருசில விவசாயிகளை நாம் இலங்கையில் கண்டுள்ளோம்.
ஆகவே கால் ஏக்கர்/ நான்கு பரப்பில் ஒரு லட்சம் ரூபாயினை முறையான திட்டமிடல் மூலம் நிச்சயமாக ஈட்டிக்கொள்ள முடியும்.
ஒற்றை பயிர்ச்செய்கையில் இந்த நிலைமை இருக்காது. காலநிலை மாற்றம் சந்தை விலை வீழ்ச்சி போன்ற ஆபத்துகளும் இருக்கும்.
ஆனால் பல அடுக்கு பயிர் செய்கையில் ஒரு மரக்கறி விலை வீழ்ச்சியடைந்தாலும், ஏனைய மரக்கறிகளின் விற்பனையால் அந்த இழப்பை ஈடுசெய்ய முடியும்.
மேலதிக நன்மைகளாக
ஓர் சிறிய நிலப்பரப்பிலேயே பல்வகை உணவுப் பொருட்கள் (சிறுதானியங்கள், மரக்கறிகள், கீரைகள், பழங்கள்) கிடைப்பதால், குடும்பத்தின் உணவுத் தேவைகளை ஓரளவுக்கு கொள்வனவு செலவின்றி நிறைவு செய்ய முடியும்.
மோசமான காலநிலை அல்லது நோய்த்தாக்கம் நிகழும் போது சில பயிர்கள் அழிந்தாலும் மற்ற பயிர்கள் பாதுகாக்கப்படும்.
களைகள் வளரும் வெற்றிட நிலம் உள்ள இடங்களில் வல்லாரை, புதினா, சலாது, பொன்னாங்கணி, கீரை போன்றவற்றை வளர்க்கும் போது களை அகற்றும் செலவு குறையும் அத்துடன் களைகள் வளரும் இடங்கள் காசாகும்.
நீர்ப்பாசனம், பசளை, கரைசல்கள் எல்லா பயிர்களுக்கும் ஒரே செலவில் போய் சேரும்.
(பல அடுக்கு பயிர் செய்கை, ஒன்றிய வாழ்க்கைக்குரிய பயிர்கள் படங்களை பார்க்கவும்.மேலதிக விபரங்களை AI, கூகுள் இடம் வினவி அறிந்து கொள்ளவும்.)
CSJ Agri,
17/10/2025
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How to Successfully Practice Natural Farming in Sri Lanka? – Series 6
🌱🌱🌱🌱🌱🌱🌱
Multi-layer cropping plays a highly significant role in natural farming for several reasons. Among them, the most important from an economic point of view is that it helps farmers increase their income substantially. Let’s look at this in detail.
As mentioned earlier, it is essential to ensure that there is a market demand for your produce. This factor must also be considered when planning multi-layer cropping.
When planning to start a home garden or farm, one should combine crops with varying harvest durations — for example:
- Daily income crops: Leafy greens (e.g., spinach varieties)
- Two or three-day income crops: Lady’s finger (okra)
- Weekly income crops: Eggplant (brinjal)
- Three-month income crops: Beans, pumpkin
- 6 to 12-month income crops: Papaya, banana, guava
- Long-term income crops: Mango, coconut
This structure should also include rainy-season crops to ensure year-round income stability.
When planning daily income crops, at least seven types of leafy vegetables should be cultivated in batches to ensure continuous harvesting. Each week, new batches should be planted to maintain steady production.
For example, on ¼ acre (4 plots) of land, when you begin marketing your produce, you can sell around 10 bundles of greens and up to 5 kilograms of vegetables per variety. Avoid overproducing at the beginning, as it may lead to waste. (After a few months, once you observe the market demand, production can be gradually increased.) This method ensures a consistent daily income.
At present, in Sri Lanka:
- A bundle of greens sells for around Rs. 70,
- Leafy vegetables like Vallarai (Gotu kola) and Thoothuvalai (Solanum trilobatum) fetch around Rs. 50.
If the produce is cleaned and neatly packed, its value can be further increased.
By maintaining this process consistently, a farmer can earn a stable daily income of Rs. 2,000–3,000 from greens alone on ¼ acre of land. This can cover daily household expenses, while the income from weekly, monthly, and seasonal crops can be saved or reinvested in infrastructure — such as poly tunnels or grow bags for rainy seasons.
In fact, there are successful natural farmers in Sri Lanka who earn Rs. 40,000–60,000 per month from just 20 perches (2 plots) of land.
Hence, through proper planning, it is possible to earn Rs. 100,000 per quarter acre (4 plots).
In contrast, mono-cropping does not offer such stability, as it is vulnerable to climate changes and market price drops.
With multi-layer cropping, even if one crop’s market price falls, the income from others compensates for the loss.
Additional Benefits:
- Multiple food varieties (millets, vegetables, greens, fruits) can be produced within a small land area, fulfilling family food needs with minimal expenditure.
- During adverse weather or pest attacks, if one crop is damaged, others may survive — ensuring continued productivity.
- By growing ground-cover crops like Gotu kola, mint, salad leaves, and spinach, weed growth is minimized, reducing labor costs while making use of otherwise empty spaces.
- Irrigation, fertilizers, and organic solutions benefit all crops simultaneously, cutting overall costs.
(For visual references, look up multi-layer cropping and companion planting images. To learn more, you can also ask AI tools or Google for additional details.)
— CSJ Agri, 17/10/2025