க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க. பொ. த உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீளாய்வுப் பெறுபேறுகளுக்கமைய 2025 ஆம் ஆண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்ப்பவர்களும், பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லைக்குள் விண்ணப்பிக்க முடியாமல் போன விண்ணப்பதாரர்களும் தமது விண்ணப்பங்களை நிகழ்நிலையில் சமர்ப்பிக்க முடியுமென இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் எக்காரணம் கொண்டும் இறுதித்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாதெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Important announcement regarding G.C.E. Advanced Level Examination applications
The Sri Lanka Examinations Department has announced that the closing date for applications for the 2025 G. C. L. Advanced Level examinations has been extended until midnight on the 12th.
The Sri Lanka Examinations Department has stated that those who are expecting to apply for the 2025 G. C. L. Advanced Level examinations based on the review results and those who were unable to apply within the time limit given for applying for the examination can submit their applications online.
The Examinations Department has also stated that the closing date will not be extended further for any reason.
Pingback: உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு