பேருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் நேற்று 15.10.2025 சுமார் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும் பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க,
பயணிகள் பேருந்து பயணங்களின்போது பயணச் சீட்டுக்களை தம் வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, பயணக் கட்டணத்தை இரு மடங்காக செலுத்தவும் வேண்டும்.
அதேநேரம் நீங்கள் கேட்டும் நடத்துனர் பயணச் சீட்டு வழங்கவில்லையென்றால், 070-2860860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு காமினி ஜாசிங்க தெரிவித்தார்.
இதுதொடர்பிலான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Important Notice for Bus Passengers
Issuing travel tickets to passengers on buses has been made mandatory from October 1st, 2025.
According to the Western Province Road Passenger Transport Authority, around 217 buses were inspected on October 15, 2025. During the inspection, 18 conductors who failed to issue tickets and 5 passengers who were traveling without valid tickets were fined.
Commenting on the matter, Authority Chairman Gamini Jayasinghe stated that any passenger traveling without a valid ticket will be fined Rs. 100 and will also be required to pay double the normal fare.
He further advised that if a conductor refuses to issue a ticket even after being asked, passengers can report the incident by calling 070-2860860.
The Western Province Road Passenger Transport Authority also confirmed that regular inspections will continue to ensure compliance with this regulation.