நீண்ட கால கொவிட் தொற்று நோய்க்கு உட்பட்டவர்களின் குருதியில் Information Revealed About Long COVID Patients விசித்திரமான கட்டிகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றங்களை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் தொற்றிற்கு உறுதியான மேலதிக புதிய சிகிச்சையினை வழங்க முடியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலான மக்கள், சிறிய அளவிலான சளி, தொண்டை வலி அல்லது இருமல் மற்றும் காய்ச்சலுக்குப் பின்னர் கொவிட் – 19 இல் இருந்து முழுமையாகக் குணமடைகிறார்கள்.
ஆனால் பல நோயாளர்கள் நீண்ட கொவிட் வைரசுடன் தொடர்புடைய அறிகுறிகளால் பாதிப்படையலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சோர்வான தன்மை, மூளை மூடுபனி மறைவு, உடல் உபாதை, மற்றும் மூச்சுத் திணறல் என்பன புதிய ரக நோய்க்கான அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த வகையான தொடர்ச்சியான அறிகுறிகளுக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் நீண்ட கால கொவிட் நோயாளர்களின் குருதியில் உள்ள சிறிய கட்டிகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல செல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான அடிப்படை தொடர்புகளை மருத்துவ விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதற்கு அமைய விரைவில் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தால், புதிய சிகிச்சைகளை மேலும் இலகுவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Information Revealed About Long COVID Patients
Medical scientists have discovered unusual clots in the blood and changes in the immune system of individuals suffering from long-term COVID infection.
According to foreign media reports, this discovery could help provide new and more effective treatments for the condition.
Most people fully recover from COVID-19 after experiencing mild symptoms such as a cold, sore throat, cough, or fever.
However, scientists believe that many patients may continue to experience symptoms linked to long COVID.
Fatigue, brain fog, body discomfort, and shortness of breath have been identified as key symptoms of this new form of illness.
Still, the exact cause of these persistent symptoms remains unclear.
In this context, medical scientists have identified fundamental links between the small clots found in the blood of long COVID patients and the changes occurring in their immune system cells.
It is hoped that discovering the underlying cause soon will make it easier to develop new treatment methods.

