கரப்பான்பூச்சி காபியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளதாக Introduction of Cockroach Coffee சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீஜிங்கில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இந்த அசாதாரணமான காபி பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
காபி கோப்பையின் மேற்பரப்பில் சிறிது வறுத்து, நசுக்கப்பட்ட கரப்பான் பூச்சித் துண்டுகள் தூவப்பட்ட காபி கோப்பை வழங்கப்படுவதாகப் புகைப்பட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த பானத்தில் உலர்ந்த மஞ்சள் புழுக்களும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கரப்பான் பூச்சி காபி ஒரு வறுத்த மற்றும் லேசான புளிப்புச் சுவையைக் கொண்டிருப்பதாக அருந்துபவர்கள் கூறுகின்றனர்.
இந்த பானத்தின் விலை 45 யுவான் (இலங்கை நாணயத்தில் சுமார் ரூ. 2000) ஆகும்.
இந்த காபி வகையைக் குறித்த அருங்காட்சியகம் ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த காபிக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் பாரம்பரிய சீன மருத்துவ மூலிகை கடையில் இருந்து வாங்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு குறித்து உறுதியாக இருக்கலாம் என்று அருங்காட்சியகம் வலியுறுத்துகிறது.
சீன பாரம்பரியத்தின் படி, கரப்பான்பூச்சிப் பொடி இரத்த ஓட்டத்திற்கு உதவும் ஒரு மருந்தாகும்.
மேலும், புரதம் நிறைந்த மஞ்சள் புழுக்கள் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் என்று மருத்துவர்கள் நம்புவதாகவும் அருங்காட்சியக ஊழியர் ஒருவர் குறிப்பிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கரப்பான் பூச்சி காபியை முக்கியமாக இளைஞர்களே அதிகம் குடிப்பதாக ஊழியர் தெரிவித்தார்.
இந்த காபி கடை ஒரு நாளைக்கு 10 கோப்பைகளுக்கும் அதிகமான கரப்பான்பூச்சி பானங்களை விற்பனை செய்வதாக சீன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Introduction of Cockroach Coffee
International media have reported that China has introduced cockroach coffee.
A museum in Beijing has launched this unusual coffee beverage.
Photo reports indicate that the coffee is served with slightly roasted and crushed cockroach pieces sprinkled on top of the cup.
It is also said that dried yellow larvae are mixed into this drink.
People who have tasted it say that this cockroach coffee has a roasted and mildly sour flavor.
The price of this beverage is 45 yuan (approximately Rs. 2,000 in Sri Lankan currency).
International media reports state that the museum introduced this type of coffee in late June.
The museum emphasizes that customers can feel safe because all the ingredients used in this coffee are purchased from a traditional Chinese herbal medicine shop.
According to Chinese tradition, cockroach powder is believed to help improve blood circulation.
In addition, an employee of the museum told international media that doctors believe protein-rich yellow larvae help boost human immunity.
The employee also mentioned that young people are the main consumers of this cockroach coffee.
Chinese reports state that the café sells more than 10 cups of cockroach beverage per day.

