iPhone Users More Affected by Scams Than Android Users
iPhone Users More Affected by Scams Than Android Users

எண்ட்ரோய்ட் பயனர்களை விட மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் ஐபோன் பயனர்கள்

மோசடி மற்றும் ஸ்கேம் குறுஞ்செய்திகளால் ஐபோன்களை விட எண்ட்ரோய்ட் (Android) பயனர்கள் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது கூகுள் நிறுவனத்தால் YouGov என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

இதில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள 5,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வின் மூலம், ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மோசடி குறுஞ்செய்திகளை ஐஓஎஸ் (iOS) பயனர்கள் பெற்றதாக தெரியவந்துள்ளது.

இதற்கான காரணம், எண்ட்ராய்ட் சாதனங்களில் உள்ள Google Messages, Phone by Google போன்ற பயன்பாடுகள், குறுஞ்செய்திகள் வழியாக வரும் ஸ்கேம் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் AI அடிப்படையிலான பல பாதுகாப்புகளை கொண்டுள்ளன.

மாதத்திற்கு 10 பில்லியனுக்கும் மேற்பட்ட சந்தேகமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் எண்ட்ராய்ட் சாதனங்கள் மூலம் தடுக்கப்படுகின்றன என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஆனால் ஐஓஎஸ் சாதனங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இல்லாததின் காரணமாக ஐபோன் பயனர்கள் அதிகம் Spam குறுஞ்செய்திகளால் பாதிக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

iPhone Users More Affected by Scams Than Android Users

A recent study has revealed that Android users are 58% less likely to be affected by scam and fraud messages compared to iPhone users.

The study was conducted by Google in collaboration with YouGov, covering more than 5,000 smartphone users across the United States, India, and Brazil.

According to the findings, iOS (iPhone) users reported receiving three or more scam messages per week.

The reason, the report suggests, is that Android devices use AI-powered protections within apps like Google Messages and Phone by Google, which can detect and block fraudulent messages and calls.

Google stated that more than 10 billion suspicious calls and messages are blocked on Android devices every month.

However, since iOS lacks similar built-in protections, iPhone users are more vulnerable to spam and scam messages, Google added.