முக்கிய 8 தலைமைத்துவ கருவிகள் – 2025 தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தலைமைத்துவம் என்பது ஒரு பதவி அல்லது அதிகாரம் மட்டுமல்ல. அது பிறரை ஊக்குவிப்பது, வழிநடத்துவது, மற்றும் ஒற்றுமையுடன் பெரிய இலக்குகளை அடையச் செய்வதற்கான கலை. இன்று வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், ஒரு நல்ல தலைவருக்கு வெறும் உற்சாகமோ, கவர்ச்சியோ மட்டும் போதாது – துல்லியமான கருவிகள் அவசியம்.
இங்கே, ஒவ்வொரு தலைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நான் கற்றுக்கொண்ட 8 தலைமைத்துவ கருவிகளை எளிதாக அனைவருக்கும் புரியும்படியாக விபரிக்க முயற்சிக்கின்றேன்.

1. தலைமைத்துவத்தின் மூன்று வகைகள்
• முன்னாலிருந்து வழிநடத்துதல் – குழுவிற்கு திசையை காட்டி, முன்னுதாரணமாக நிற்பது.
• பக்கத்தில் இருந்து வழிநடத்துதல் – இணைந்து செயல்பட்டு, குழுவை ஊக்குவிப்பது.
• பின்னால் இருந்து வழிநடத்துதல் – பிறரை முன்னிலைப்படுத்தி, சக்தியூட்டி வளரச் செய்வது.
2. நீங்கள் எந்த வகை உத்தி வல்லுநர்?
ஒவ்வொரு தலைவரும் தங்கள் உத்தியை வேறு விதமாக அணுகுகிறார்கள்:
• அரசர் (The Regent)– மேலிருந்து உத்தரவிடுபவர்.
• சேவகர் (The Servant)– குழுவை உயர்த்துபவர்.
• படைப்பாளி (The Joker) – புதுமை மற்றும் படைப்பாற்றலால் மாற்றத்தை ஏற்படுத்துபவர்.
• மூத்தவர் (The Elder)– அனுபவம், பாரம்பரியம் சார்ந்தவர்.
• அந்நியர் (The Stranger) – புதிய சிந்தனைகளை கொண்டு வரும் நபர்.
• முள்ளம்பன்றி (The Hedgehog) – ஒரே திசையில் கவனம் செலுத்துபவர்.
3. கூட்டங்களை பயனுள்ளதாக்கும் ஆறு கேள்விகள்
- என்ன பேசவேண்டும்?
- யார் பங்கேற்க வேண்டும்?
- எங்கு நடத்துவது?
- எப்போது நடத்துவது?
- எவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?
- என்ன முடிவை எடுத்து செல்ல வேண்டும்?
4. உத்திசார்ந்த 10 தலைமைத்துவக் கொள்கைகள்
- பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளல் – குழுவினருக்கு பொறுப்புகளை ஒழுங்காக பகிர்ந்து, அவர்களை மேம்படுத்தவும்.
- தகவல்களில் திறந்துவிடு – முக்கிய தகவல்களை மறைக்காமல் பகிர்ந்து, நம்பிக்கையையும் தெளிவையும் உருவாக்கவும்.
- பல்வேறு யோசனைகளுக்கு இடமளி – அனைத்து கருத்துக்களையும் கேட்டு, புதிய யோசனைகளை ஊக்குவிக்கவும்.
- தவறுகளை அனுமதி – குழுவினர் தவறுகளை செய்யலாம் என்பதைக் கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ளச் செய்யவும்.
- கற்றல் வாய்ப்புகளை உருவாக்கு – குழுவினருக்கு புதிய திறன்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகளை வழங்கவும்.
- அனுபவத்திலிருந்து கற்று கொள் – உங்கள் மற்றும் பிறரின் அனுபவங்களை பகிர்ந்து, தலைமை திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும்.
- மாற்றத்துக்கான ஆட்களை நியமி – மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கு குழுவில் சரியான நபர்களை தேர்வு செய்யவும்.
- உன்னுடைய முழு மனிதத் தன்மையையும் வெளிப்படுத்து – உணர்ச்சி, நெறிமுறை மற்றும் ஆழமான மனித தன்மையை காட்டவும்.
- சிந்தனைக்கு நேரமிடு – முக்கிய முடிவுகளை எடுக்க முன் ஆராய்ச்சி செய்து சிந்திக்க நேரம் ஒதுக்கவும்.
- தொடர்ச்சியாக தலைமைத்துவ திறன்களை மேம்படுத்து – புதிய திறன்கள் மற்றும் அறிவை தொடர்ந்து கற்றுக்கொண்டு செயல்படவும்.
5. நல்ல தலைவர் vs. வலுவான தலைவர்
• நல்ல தலைவர்: பணிவானவர், பொறுமையானவர், ஆதரவானவர், மன்னிப்பவர்.
• வலுவான தலைவர்: தெளிவான முடிவுகளை எடுப்பவர், உறுதியானவர், உயர்வை நோக்கும் விருப்பமுடையவர்.
சிறந்த தலைமைத்துவம் இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதே.
6. அழிக்க வேண்டிய 7 விதமான எதிர்மறை பழக்கங்கள்
- தீர்வு இல்லாமல் குறைசொல்லுதல்
- தேவையற்ற ஒப்பீடுகள்
- எப்போதும் கவலைப்படுதல்
- அழிவை தரும் விமர்சனம்
- பிறரை குறைசொல்வது
- அனைவரையும் மகிழ்விக்க முயற்சித்தல்
- தன்னம்பிக்கை இழந்து போதல்
7. பணிவான தலைமை vs. பலவீனத்தை வெளிப்படுத்தும் தலைமை
• பணிவு – குழுவை முன்னிலைப்படுத்தி, வெற்றியை பகிர்ந்து கொள்வது.
• பலவீனத்தை வெளிப்படுத்தல் – தவறுகளை ஒப்புக்கொண்டு, உண்மையான மனிதராக இருப்பது.
இவை இரண்டும் சேர்ந்து நம்பிக்கையுடன் கூடிய உண்மையான தலைவரை உருவாக்கும்.
8. ஈடுபாட்டை ஏற்படுத்தும் கருத்து பகிர்வின் 5 விதிகள்
- உன் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும்
- நபரை அல்ல, நடத்தை குறித்து பேச வேண்டும்
- ஊகமல்ல, உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்
- குறைசொல்லாமல் வழிகாட்டும் ஆலோசனைகளை தர வேண்டும்
- இருதரப்பிலும் உரையாடலுக்கு இடமளிக்க வேண்டும்
தலைமை என்பது ஒரு பயணம். இங்கு குறிப்பிட்டுள்ள 8 தலைமைத்துவ கருவிகள் உங்களுக்கு திசை, நம்பிக்கை, மற்றும் குழுவினருடன் உறுதியான பிணைப்பை உருவாக்க உதவும்.
இது முதல் கட்டுரை மட்டுமே. அடுத்த வாரங்களில் ஒவ்வொரு கருவியையும் (Tools) தனித்தனியாக விரிவாக ஆராய்ந்து, நடைமுறை உதாரணங்களுடன் பகிரப்படும். தொடர்ந்து மாற்றம் செய்தியில் நான் கற்றுக்கொண்ட இந்த 8 கருவிகளைப் பற்றிய தொடர் ஆக்கத்தினை தரவிருக்கின்றேன். இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் ஏதும் இருப்பின் பின்னூட்டமாக பதிவிடவும்.
K.Pratheeswaran
Career Mender & Social Entrepreneur
VCOT EduTech

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Top 8 Leadership Tools – 2025
Leadership is not merely a title or authority. It is the art of inspiring others, guiding them, and achieving greater goals collectively. In today’s rapidly changing world, a good leader needs more than just enthusiasm or charisma – precise tools are essential.
Here, I explain 8 leadership tools that every leader should learn, in a simple way for everyone to understand.
1. Three Types of Leadership
- Leading from the Front – Guiding the team by showing direction and leading by example.
- Leading from the Side – Collaborating with the team and encouraging them.
- Leading from Behind – Empowering others by putting them in the spotlight and helping them grow.
2. Which Type of Leader Are You?
Every leader approaches their strategy differently:
- The Regent – Commands from above.
- The Servant – Elevates the team.
- The Joker – Brings change through creativity and innovation.
- The Elder – Relies on experience and tradition.
- The Stranger – Introduces new ideas.
- The Hedgehog – Focuses deeply on one direction.
3. Six Questions to Make Meetings Effective
- What should be discussed?
- Who should participate?
- Where should it be held?
- When should it take place?
- How long should it last?
- What decisions should be taken?
4. 10 Leadership Principles to Follow
- Share Responsibilities – Distribute tasks fairly and help team members grow.
- Be Transparent with Information – Share key information openly to build trust and clarity.
- Encourage Diverse Ideas – Listen to all opinions and foster new ideas.
- Allow Mistakes – Let team members make mistakes and learn from them.
- Create Learning Opportunities – Provide chances for the team to develop new skills.
- Learn from Experience – Share your and others’ experiences to improve leadership.
- Appoint People for Change – Select the right people for innovation and progress.
- Show Your Full Humanity – Demonstrate empathy, integrity, and emotional intelligence.
- Take Time to Reflect – Allocate time to think before making important decisions.
- Continuously Improve Leadership Skills – Keep learning new skills and knowledge.
5. Good Leader vs. Strong Leader
- Good Leader: Humble, patient, supportive, forgiving.
- Strong Leader: Makes clear decisions, decisive, ambitious.
The best leadership balances both qualities.
6. Seven Negative Habits to Avoid
- Criticizing without solutions
- Unnecessary comparisons
- Constant worrying
- Destructive criticism
- Belittling others
- Trying to please everyone
- Losing self-confidence
7. Humble Leadership vs. Showing Vulnerability
- Humility: Prioritizing the team and sharing success.
- Vulnerability: Accepting mistakes and being authentic.
Together, they create a trustworthy and genuine leader.
8. Five Rules for Engaging Conversations
- Be clear about your purpose.
- Speak about behavior, not the person.
- Base discussion on facts, not assumptions.
- Give guidance without criticizing.
- Allow space for dialogue from both sides.
Leadership is a journey.
These 8 leadership tools will help you gain direction, build trust, and create strong bonds with your team.
This is just the first article. In the coming weeks, each tool will be explored in detail with practical examples. I invite you to share your feedback and thoughts on these tools.
K.Pratheeswaran
Career Mender & Social Entrepreneur
VCOT EduTech