விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது தசாப்தம் கடந்து சமூகத்தில் இளைஞர் மத்தியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெயர் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடதக்கவிடயமாகும்.
அந்த வகையில் மத நல்லிணக்கம் மற்றும் இனங்களிடையே ஒற்றுமை என்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு இலங்கையின் சகல மத, இன மக்களுடன் தனது சந்திப்பினை மேற்கொண்டு வருகின்ற பொகவந்தலாவ விகாரையின் வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்கள் 26.03.2025 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் அளித்திருந்த வேளை விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரிக்கும் வருகையினை மேற்கொண்டிருந்தார்.



அந்த வகையில் தேரர் அவர்கள் கல்லூரியின் செயற்பாடுகள் பற்றி கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு K பிரதீஸ்வரன், கல்லூரியின் முதல்வர் மற்றும் சேவையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதோடு மட்டுமல்லாது கல்லூரி பயிலுனர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Love and Peace for Future Generations to Thrive…



Vivekananda College of Technology has made a remarkable impact on society over the past decade, significantly influencing the youth and earning a reputation as an institution dedicated to transformative education and progress.
In alignment with the principles of religious harmony and unity among different ethnic communities, the Venerable Rahul Thero of the Bogawantalawa Vihara has been actively engaging with people of all faiths and ethnicities across Sri Lanka. As part of his visit to the Batticaloa district on March 26, 2025, he also made a special visit to Vivekananda College of Technology.



During his visit, the Thero engaged in discussions with the College’s Executive Director, Mr. K. Pratheeswaran, along with the Principal and faculty members, to gain insights into the institution’s operations and contributions to education. Furthermore, he interacted with the students, sharing valuable thoughts and engaging in meaningful dialogues, emphasizing the importance of unity, peace, and knowledge-sharing in today’s diverse society.
His visit not only strengthened the spirit of religious coexistence but also served as an inspiration for the students, encouraging them to uphold values of harmony and mutual respect. The discussions highlighted the role of education in fostering social unity and underscored the importance of collective efforts in building a peaceful and progressive society.


The Vivekananda College of Technology expressed gratitude for the Thero’s visit, recognizing it as a significant step toward nurturing inclusivity and reinforcing the institution’s commitment to holistic education and social development.
For More news visit us Maatram News