Low-Pressure System Moving Away from the Country நாட்டில் இன்று திங்கட்கிழமை மழை வீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாட்டை விட்டு விலகி செல்வதால் மழை வீழ்ச்சி குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Low-Pressure System Moving Away from the Country
The Department of Meteorology has forecast that rainfall will decrease in the country today (Monday).
It has been stated that the low-pressure system prevailing in the atmosphere near the southwest Bay of Bengal is moving away from the country, leading to a reduction in rainfall.
However, heavy rainfall may still occur in the Northern, North Central, and North Western Provinces, as well as in the Trincomalee District, according to the Department of Meteorology.
Showers or thundershowers may occur at several places after 2.00 p.m. in the districts of Galle, Matara, Ratnapura, and Hambantota.
The Department further stated that misty conditions may prevail during the morning in the Central, Sabaragamuwa, and Uva Provinces, as well as in the districts of Ampara and Hambantota.

