14th year
14th year

14வது ஆண்டில் கால்தடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி, “அனைவருக்கும் கணணி அறிவு” என்ற தொனிப்பொருளில் கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று தனது 14வது ஆண்டில் கால்தடம் பதித்துள்ளது.

இக்கல்லூரி, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு இலவசமாக கணணி பயிற்சிகளை வழங்கி, பலரது வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறு கணணி கூடமாக ஆரம்பித்த இந்த பயணமானது, இன்று பல கிளைகளுடன் ஒரு சமூக அறக்கட்டளை, சமூகக் கல்லூரி மற்றும் தொழில்துறையில் முன்னேறத் தயாராகும் இளைஞர்களுக்கான தொழில்கூடமாக வலுவடைந்துள்ளது.

13வது ஆண்டு நிறைவு விழா 04.05.2025 அன்று கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் சேவையாளர்கள் மற்றும் பயிலுனர்களினால் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர், கல்லூரி பணிப்பாளர், கல்லூரி முதல்வர், விவேகானந்த சமூதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளர். அமிர்தா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, சேவையாளர்கள் மற்றும் கல்லூரியின் பயிலுனர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் முதல்கட்டமாக மட்டகளப்பு மாவட்டத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் விவேகானந்தரின் உருவசிலைக்கு மாலையணிவித்து பூசை இடம்பெற்றது. அதன் பின்னர் கல்லூரி மாணவர்களினால் கல்லூரியின் ஆண்டு நிறைவு விழாவானது கொண்டாடப்பட்டதோடு அதில் கலந்து கொண்ட கல்லூரி நிறைவேற்றுப்பணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வரினால் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

அந்தவகையில் “அனைவருக்கும் கணணி அறிவு” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி இன்று அடிப்படை கணணி பயிற்சி தொடக்கம் Diploma in ICT (NVQ Level-05) வரை வளர்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும், தொழிநுட்பம் மட்டுமல்லாது பயிலுனர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் சிறந்ததொரு நபராக மாற்றுவதில் கல்லூரியானது சிறந்தமுறையில் செயற்பட்டு வருகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Marking the beginning of the 14th year

Located in the Puthukudiyiruppu area of Batticaloa District, the Vivekananda College of Technology was established in 2012 with the motto “Computer Knowledge for All”. Having embarked on its mission with a modest beginning, the college has now proudly entered its Marking the beginning of the 14th year of dedicated service and transformative impact. Celebrating 13 years of empowering youth through free computer education, Vivekananda College of Technology in Batticaloa continues to transform lives with ICT training and social development.

The college was founded with a vision to empower underprivileged youth—especially those from economically challenged backgrounds and school leavers—by providing free computer education and training. Over the years, what began as a small computer lab has evolved into a fully-fledged social foundation, a community college, and a technical training hub that nurtures youth towards promising career pathways in the tech and business sectors.

The 13th Anniversary Celebration took place on 04.05.2025, under the leadership of the college’s Executive Director, Mr. K. Pratheeswaran, and was jointly organized by the college’s dedicated service team and trainees. The event was graced by several key personalities including the Chairperson of the Social Welfare Organization, the College Director, the Principal, the Project Coordinator of Vivekananda Community Foundation, the Executive Officer of Amirda Organization, along with staff members and students of the college.

As a symbolic beginning to the event, a floral tribute and prayer ceremony was held at the grand statue of Swami Vivekananda in Batticaloa district, highlighting the spiritual inspiration behind the institution. Following this, the anniversary celebration continued with performances and presentations by the college trainees.

During the event, both the Executive Director and the Principal delivered insightful addresses, shedding light on the college’s development over the years and its current activities. They emphasized the institution’s unwavering commitment to educational empowerment and societal transformation.

The college, which was initially focused on offering basic computer training, has now expanded its curriculum to include Diploma in ICT (NVQ Level-05)—a significant milestone that speaks to its growth and adaptability. More importantly, the institution has made a lasting impact not only through technical training but also by shaping the attitudes, mindset, and confidence of its students, enabling them to become responsible, skilled, and socially aware individuals.

Vivekananda College of Technology continues to stand as a beacon of hope and progress in the region, dedicated to bridging the digital divide and transforming lives through accessible and meaningful education.

For more news visit us Maatram News