பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார்
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும்உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ரஷ்ய மத்திய மருந்து மற்றும்உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா கூறியதாவது:
பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது. தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும்.
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது. நோயின் முக்கியத்துவத்தை பொறுத்து, புற்றுநோய் கட்டியின் அளவு விரைவில் குறைவதுடன் குணமடையும் வேகமும் 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கும்.மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Medicine for colon cancer is ready
Foreign media have reported that the Russian Federal Drug and Biological Agency has announced that the vaccine against colon cancer is ready for use.
It is noteworthy that Russian President Putin recently announced that Russian scientists are in the final stages of developing a vaccine against cancer.
In this regard, the head of the Russian Federal Drug and Biological Agency, Veronika Govortsova, said:
The results of many years of research have been in clinical trials for the past 3 years. Now this injection is ready for use. It will be used soon after government approval.
Studies have shown that this vaccine is safe. It works against cancer. Depending on the severity of the disease, the size of the cancer tumor will quickly decrease and the speed of recovery will increase by 60 to 80 percent. Work is also underway to find vaccines for many other cancers. She said this.