Newly Constructed Bridge Collapses in China
Newly Constructed Bridge Collapses in China

சீனாவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து வீழ்ந்தது

சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் Newly Constructed Bridge Collapses in China புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி பாலமே (Hongpi bridge) இடிந்துள்ளது.

பாலத்தின் அருகே உள்ள வீதிகள் மற்றும் கட்டடங்களில் விரிசல் காணப்பட்டதால், திங்கட்கிழமை பிற்பகல் முதல் காவல்துறையினர் பாலத்தை மூடி, போக்குவரத்தை மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விட்டனர்.

பாலம் இடிந்து வீழ்ந்த போது பாலத்தில் பாரவூர்தி ஒன்று இருந்ததாகவும், அதிலிருந்து சாரதி பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newly Constructed Bridge Collapses in China

A newly constructed bridge in China’s southwestern Sichuan province has partially collapsed due to a landslide, causing widespread shock.

Fortunately, no casualties were reported in the incident.

The collapsed structure is the Hongqi Bridge, located in Maerkang City, with a total length of 758 meters.

Cracks had appeared on nearby roads and buildings, prompting police to close the bridge and divert traffic to alternative routes from Monday afternoon onward.

According to Chinese media reports, a heavy vehicle was on the bridge at the time of the collapse, but the driver was safely rescued.