இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் “One Field a Month” Program in Palacholai தொனிப்பொருளில் சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு செயற்பாடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கல்லூரியினால் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் ‘மாதம் ஒரு களம்’ செயற்பாடானது பலாச்சோலை பிரதேசத்தில் உள்ள தையல் தொழிலாளர்கள் மற்றும் தையல் பயிற்சியினை சமீபத்தில் நிறைவு செய்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, உள்ளூரில் சிறியளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆடை கைத்தொழிலை இன்னுமொரு படி முன்னேற்றி வணிகத் திட்டச் சுருக்கம், குறைந்தபட்ச பயன்பாட்டு தயாரிப்பு, வணிகத்திற்கான வாட்ஸ்அப் பயன்பாடு என்பன தொடர்பில் தொழில் வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் தெய்வேந்திரன் சுரேந்திரன் (HRDO), பலாச்சோலைப் பெண்கள் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி வளவாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
“One Field a Month” Program in Palacholai
Under the theme “Empowering Youth for Change,” the “One Field a Month” initiative implemented by Vivekananda College of Technology as a social transformation program is being conducted monthly under the coordination of the Vivekananda Community Foundation.
Accordingly, the “One Field a Month” program was recently conducted for tailors and those who had recently completed sewing training in the Palacholai area.
During the event, business guidance was provided on topics such as developing local small-scale garment industries, business model summaries, minimum viable products (MVPs), and using WhatsApp for business purposes.
The event was attended by Mr. Theivendran Surendran (HRDO), women from the Palacholai community, and resource persons from Vivekananda College of Technology.

