விவேகானந்த பூங்காவின் ஒரு வருட பூர்த்தி தினம்

மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள விவேகானந்த பூங்காவின் ஒரு வருட பூர்த்தி தினம் இன்று 25.08.2025 திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.
சமூக நலன்புரி அமைப்பு திலகவதியார் மகளிர் இல்லம் மற்றும் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் சமூகதீபம் க.சற்குணேஸ்வரன் ஐயாவின் எண்ணங்களின் வலிமையின் வழியே இப்பூங்காவானது 2024.08.25 அன்று உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்ட நிலையில் இன்று ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.
இதன்போது விவேகானந்த குடும்பத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் அங்கு இடம்பெற்ற பூஜை வழிபாட்டிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
சமூக நலன்புரி அமைப்பின் ஒரு செயற்பாடாக திறந்து வைக்கப்பட்ட விவேகானந்த பூங்காவானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்தால் அழியாத நிர்மாணிப்பாக நிலைத்து நிற்கும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
One year anniversary of Vivekananda Park
The one-year anniversary of the Vivekananda Park located in Kirankulam, Batticaloa was celebrated today, Monday, 25.08.2025.
Through the strength of the thoughts of the founder of the social welfare organization Thilagavathiyar Women’s Home and Vivekananda College of Technology, Samadeepam K. Sarkuneswaran, this park has completed one year today, having been officially inaugurated on 25.08.2024.
It is noteworthy that members of the Vivekananda family were present on this occasion and also participated in the puja worship held there.
There is no change in the fact that the Vivekananda Park, which was inaugurated as an activity of the social welfare organization, will remain a timeless structure in the Batticaloa district.