அபாயத்தில் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் – உடனடியாக கடவுச்சொற்கள் மாற்ற வல்லுநர்கள் பரிந்துரை

அபாயத்தில் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் – உடனடியாக கடவுச்சொற்கள் மாற்ற வல்லுநர்கள் பரிந்துரை

கூகுள், அப்பிள், மைக்ரோசொப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் வரை கசிந்திருப்பதாகவும், மிகப்பெரிய சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க உடனடியாக அனைவரும் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுதொடர்பாக எந்த நிறுவனமும் அதிகாரபூர்வ அறிவிப்பை இதுவரை அறிவிக்கவில்லை.

அப்பிள், கூகுள், முகநூல், மைக்ரோசொப்ட், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சட் போன்ற முக்கிய தளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் 18.4 கோடிக்கு அதிகமான கணக்குகளின் பயனர்களின் பெயர்கள் (User name), கடவுச்சொற்கள் (Password) உள்ளிட்ட தரவுகள் அடங்கிய தளத்தை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

டார்க் வலைதளத்தில் இந்த தரவுகள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவுகள் மட்டுமின்றி, வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரச துறைகளின் தரவுகளும் கசிந்துள்ளது.

பெரும் நிறுவனங்கள், அரசு துறைகளைக் கடந்து மக்கள் நேரடியாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் தரவுகள் வங்கிக் கணக்குகளின் தரவுகளும் திருட்டுப்போயுள்ளன.

இதேவேளை உலகளவில் பெரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் உடனடியாக தங்களின் சமூக ஊடக கணக்குகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றின் கடவுச்சொற்களை மாற்ற வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

People’s personal information at risk – Experts recommend changing passwords immediately

Cybersecurity researchers have reported that the passwords of users of popular platforms such as Google, Apple, Microsoft, Facebook, and Instagram have been leaked.

Furthermore, it has been revealed that the data breach extends from social media account passwords to banking account credentials. Experts have advised everyone to immediately change their passwords to avoid falling victim to what is considered a massive cyberattack.

However, none of the companies involved have issued any official statements regarding the matter so far.

A cybersecurity researcher has discovered a website that contains the usernames and passwords of more than 1.84 billion accounts linked to major platforms such as Apple, Google, Facebook, Microsoft, Instagram, and Snapchat.

It has been reported that this data is being sold on the dark web.

Not only have data from large tech companies been compromised, but information from banks, financial institutions, and even government departments has also been leaked.

There is a high possibility that individuals could be directly affected, beyond just large corporations and government sectors.

Data from social networking sites like Facebook and Instagram, as well as banking information, have been stolen.

In light of this, cybersecurity experts worldwide are urging everyone to immediately change the passwords of their social media accounts, bank accounts, and other online platforms to protect themselves from the impact of this large-scale breach.

For more news Maatram News