தொடருந்துகளில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தொடருந்துகளில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தொடருந்துகளில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தொடருந்துகளில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த தொடருந்து பாதுகாப்பு அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடருந்து பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று இலங்கை நடமாடும் தொடருந்து வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம் என்ற பெயரில் திருட்டுகள் இடம்பெறுவதாக பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 1902ஆம் ஆண்டு தொடருந்து கட்டளைச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ், தொடருந்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் வியாபாரிகள் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Important instructions for those involved in trading in trains

The Superintendent of Railway Safety has taken action to strictly enforce the law against those involved in trading on trains.

It is reported that this action will be taken following an increase in complaints from train passengers.

The Sri Lanka Railway Traders Association has stated that this action will seriously affect the livelihood of traders.

It is reported that there have been an increase in complaints from passengers that thefts are taking place in the name of trade.

Accordingly, under the laws introduced by the Railway Ordinance Act of 1902, steps have been taken to strictly enforce the law against traders who behave in a way that causes inconvenience to train passengers.