இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்கள் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றும் அமுலில் இருக்கும் எனக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மலையகத் தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் 10 தொடருந்து சேவைகள் இன்று நண்பகல் 12 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இஹலகோட்டைக்கு அருகே தொடருந்தொன்று தடம் புரண்டுள்ளதால், சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Possibility of Heavy Rainfall Today
Heavy rainfall of up to 75 millimeters is expected in several parts of the country today.
According to the Department of Meteorology, rainfall of up to 75 millimeters is likely in the Western, Sabaragamuwa, Central, North Central, and Southern Provinces.
Strong winds with speeds between 30 to 40 kilometers per hour may also occur in the western slopes of the central hills, as well as in the Western, Northern, North Central Provinces, and the Trincomalee District.
The Department has advised the public to take necessary safety precautions to minimize accidents caused by thundershowers and lightning strikes.
Meanwhile, the Landslide Early Warning issued for 11 districts will remain in effect today, according to the National Building Research Organisation (NBRO).
In addition, the Railway Department announced that 10 train services on the upcountry railway line have been canceled until 12 noon today.
The cancellations were made following the derailment of a train near Ihala Kotte, the department said.

