இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இந்த விதிகளை மீறும் வகையில் யாரேனும் செயற்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை அறைகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Private classes banned from midnight today
All training classes, distribution of question papers, seminars, lectures and workshops related to the Grade 5 Scholarship Examination have been banned from midnight today, said Commissioner-General of Examinations Indika Kumari Liyanage.
She also said that if anyone acts in a manner that violates these rules, the Sri Lanka Examinations Department will take legal action under the Examinations Act.
Meanwhile, the Commissioner-General of Examinations stated that all candidates should go to the examination rooms at 8.30 am.
This year, a total of 307,959 candidates, including 231,638 Sinhala language candidates and 76,313 Tamil language candidates, have appeared for the Scholarship Examination.