Railway Department

இரவு நேர புகையிரத நேரங்களில் மாற்றம்!

இரவு நேரங்களில் ஓடும் புகையிரதங்களில் காட்டு யானைகள் மோதுவதை தடுக்க புகையிரதத்துறை நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கமைய முதல் கட்டமாக, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில் வேகத்தை குறைக்க, அந்த பகுதிகளுக்கு குறைந்த வேக வரம்பை வழங்குவதன் மூலம் புகையிரதத்துறை புகையிரத அட்டவணையைத் திருத்தியுள்ளது.

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள காலங்களில் புகையிரத வேகத்தை குறைக்க, சம்பந்தப்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள காலங்களுக்கு முன்னும், பின்னும் புகையிரதங்களை இயக்க புகையிரதத்துறை புகையிரத தொடக்க நேரங்களையும் திருத்தியுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு பாதையில் பளுகஸ்வெவ முதல் ஹிங்குராக்கொட வரையிலும், வெலிகந்த முதல் புனானை வரையிலும், திருகோணமலை பாதையில் கல்ஓயா சந்தி முதல் கந்தளாய் வரையிலும் உள்ள பகுதிகளைப் பாதிக்கும் வகையில் ரயில் நேர அட்டவணைகள் திருத்தப்பட்டு, 2025 மார்ச் 07 முதல் செயல் படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த திகதியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் “மீனகாயா” இரவு நேர அஞ்சல் ரயிலுக்கு S-13 வகை பவர் புகையிரதத்தை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

07.03.2025 முதல் வரவிருக்கும் திகதிகளுக்கு முன்பதிவு செய்த பயணிகள், திட்டமிட்டபடி சம்பந்தப்பட்ட புகையிரதங்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேருமாறு புகையிரதத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி புகையிரதங்களின் தொடக்க நேரங்கள் திருத்தப்பட்டதாலும், வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் புகையிரத நிலையங்களை அடைவதில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருப்பதற்கு புகையிரதத்துறை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

காட்டு யானைகளைப் பாதுகாப்பதை புகையிரதத்துறை ஒரு தேசியப் பொறுப்பாக கருதி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறது.

07.03.2025 முதல் திருத்தப்பட்ட புகையிரதம் புறப்படும் மற்றும் சேருமிடம் நேரங்கள் இதன் மூலம்  வழங்கப்படுகின்றன.

6011 (கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு) “உதய தேவி”

  • கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் காலை 06:05 மணி   
  • மட்டக்களப்புக்கு வருகை  மாலை 14 : 49 மணி 

6075 (கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு) “புலதிசி”

  • கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் மாலை 15:15 மணி
  • மட்டக்களப்புக்கு வருகை  இரவு 12 : 03 மணி 

6079 (கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு) “மீனகயா”

  • கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் இரவு 23.00 மணி
  • மட்டக்களப்புக்கு வருகை காலை 08.28 மணி

6012 (மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை) “உதய தேவி”

  • மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரம்  காலை 06:10 மணி
  • கொழும்பு கோட்டைக்கு வருகை மாலை 14: 53

6076 (மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை) “புலதிசி”

  • மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரம்  அதிகாலை  01:30 மணி  
  • கொழும்பு கோட்டைக்கு வருகை காலை 10:10 மணி  

6080 (மட்டக்களப்பு – கொழும்பு கோட்டை) “ மீனகாயா”

  • மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரம்  மாலை 18:15 மணி  
  • கொழும்பு கோட்டைக்கு வருகை அதிகாலை 03:30 மணி 

7083 (கொழும்பு கோட்டை – திருகோணமலை)

  • கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் இரவு 21 : 30
  • திருகோணமலைக்கு வருகை காலை 06: 08

7084 (திருகோணமலை – கொழும்பு கோட்டை)

  • திருகோணமலையிலிருந்து புறப்படும் நேரம் மாலை 18:30
  • கொழும்பு கோட்டைக்கு வருகை அதிகாலை 03: 19

மேலதிக தகவல்களுக்கு: https://maatramnews.com


Railway Department Change in Night Train Timings!

The Railway Department has taken both short-term and long-term measures to prevent wild elephants from colliding with trains at night.

As an initial step, the train schedule has been revised to impose speed limits in areas where wild elephants frequently move. This adjustment includes reducing train speeds in these zones and revising train departure times accordingly.

To further ensure safety, train operating times have been adjusted before and after the peak elephant movement hours in affected areas.

Revised Train Schedules from March 7, 2025

The revised train schedule will be implemented from March 7, 2025, affecting the following routes:

  • Batticaloa Line: From Palugaswewa to Hingurakgoda and from Welikanda to Punani
  • Trincomalee Line: From Gal Oya Junction to Kantale

Additionally, starting from March 7, 2025, the “Meenagaya” night mail train operating between Colombo Fort and Batticaloa will be upgraded to run with an S-13 power train.

Passengers who have pre-booked tickets for trains running after March 7, 2025, are requested to arrive at the designated stations on time, as per the revised schedule.

The Railway Department has apologized for any additional travel time caused by these speed restrictions and reassured that these actions are taken as a national responsibility to protect wild elephants.

Revised Train Timetable (Effective from March 7, 2025)

Colombo Fort – Batticaloa Trains

  • 6011 “Udaya Devi”
    • Departure: 06:05 AM from Colombo Fort
    • Arrival: 02:49 PM at Batticaloa
  • 6075 “Pulathisi”
    • Departure: 03:15 PM from Colombo Fort
    • Arrival: 12:03 AM at Batticaloa
  • 6079 “Meenagaya”
    • Departure: 11:00 PM from Colombo Fort
    • Arrival: 08:28 AM at Batticaloa

Batticaloa – Colombo Fort Trains

  • 6012 “Udaya Devi”
    • Departure: 06:10 AM from Batticaloa
    • Arrival: 02:53 PM at Colombo Fort
  • 6076 “Pulathisi”
    • Departure: 01:30 AM from Batticaloa
    • Arrival: 10:10 AM at Colombo Fort
  • 6080 “Meenagaya”
    • Departure: 06:15 PM from Batticaloa
    • Arrival: 03:30 AM at Colombo Fort

Colombo Fort – Trincomalee Trains

  • 7083
    • Departure: 09:30 PM from Colombo Fort
    • Arrival: 06:08 AM at Trincomalee
  • 7084
    • Departure: 06:30 PM from Trincomalee
    • Arrival: 03:19 AM at Colombo Fort

For more details: https://maatramnews.com