சுய ஆளுமை விருத்தியும் தியான நுட்பங்களும் பயிற்சி செயலமர்வு
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர்களுக்கான திறன்விருத்தி பயிற்சிகள், வாழ்வியல் மற்றும் வாழிகாட்டல் செயல்பாடுகளை கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றது.
மேலும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வூட்டும் வழிகாட்டல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன் ஒரு கட்டமாக 23/09/2025 இன்று தொழில்ப்பயிற்சி நிலையங்களான புதுக்குடியிருப்பு, கொம்மாதுறை நிலையங்களில் பயிற்சி பெறுபவர்கள் மற்றும் சமுதாய கல்லூரிகளான கரடியனாறு, காரைதீவு போன்ற நிலையங்களில் வாழ்வியலும் வழிகாட்டலும் செயற்பாட்டில் பங்குபற்றும் பயிலுனர்களுகள் என அனைவரும் கல்லடியில் அமைந்துள்ள இராமகிருஸ்ண மிஷனுக்கு வருகைதந்ததுடன் அங்கு சுய ஆளுமை விருத்தியும் தியான நுட்பங்களும் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் கலந்து கொண்டு தனிமனித சுயஆளுமை விருத்தி பற்றி சொற்பொழிவாற்றினார். மேலும் மட்டக்களப்பு கல்வி வயத்தின் முறைசாராக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும், தொழில்வழிகாட்டல் வளவாளருமான அ.ஜெகன்நாதன் அவர்கள் பயிலுனர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வை மேற்கொண்டார்.

இதேவேளை குறித்த நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன், கல்லூரி முதல்வர் த.சந்திரசேகரம் மற்றும் கல்லூரியின் வளவாளர்கள், போதனாசிரியர்கள் உள்ளடங்கலாக பயிலுனர்களுடன் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர்களுக்கான திறன்விருத்தி பயிற்சிகள், வாழ்வியல் மற்றும் வாழிகாட்டல் செயல்பாடுகளை கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை குறித்த நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன், கல்லூரி முதல்வர் த.சந்திரசேகரம் மற்றும் கல்லூரியின் வளவாளர்கள், போதனாசிரியர்கள் உள்ளடங்கலாக பயிலுனர்களுடன் 75 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Self-Development and Meditation Techniques Training Workshop
The Vivekananda Technical College has been conducting skill development training, life skills, and guidance programs for the youth of Batticaloa District for over 12 years.
In addition, various awareness and guidance activities are being carried out for the students undergoing training at Vivekananda Technical College.
As part of these efforts, on 23/09/2025, trainees from training centers such as Puthukudiyiruppu and Kommathurai, as well as from community colleges in Karadianaru and Karaithivu, participated in a life skills and guidance program. They all visited the Ramakrishna Mission in Kallady, where a training workshop on self-development and meditation techniques was conducted.
On this occasion, Srimat Swami Neelamadhavanandaji Maharaj, the General Manager of the Ramakrishna Mission, delivered a special lecture on individual self-development. In addition, A. Jegannathan, Officer for Non-Formal Education of the Batticaloa Zonal Education Office and Career Guidance Resource Person, conducted a guidance session for the trainees.
At the same time, the event was attended by K. Pratheeswaran, Executive Director of Vivekananda Technical College, T. Chandrasekaram, Principal of the College, along with the college’s resource persons, teaching staff, and trainees. More than 75 participants in total took part in the program.