Seminar for O/L Students of the Batticaloa – Pattiruppu Education Zone
Seminar for O/L Students of the Batticaloa – Pattiruppu Education Zone

பட்டிருப்பு கல்வி வலயத்தின் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு

Seminar for O/L Students of the Batticaloa – Pattiruppu Education Zone சுவாமி விவேகானந்தரின் 164ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, Manitha Neyam Trust மற்றும் Vivekananda College of Technology (VCOT) இணைந்து, G.C.E. (O/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவித் திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் கீழ், மட்டக்களப்பு – பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வி கற்கும் 1,436 மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், 5 முக்கிய பாடங்களுக்கு உட்பட்ட மாதிரி வினாத்தாள்கள், பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு. S. ஸ்ரீதரன் அவர்களிடம் 2026 ஜனவரி 12ஆம் திகதி, மற்றும் கல்குடா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. T. ஆனந்தரூபன் அவர்களிடம் 2026 ஜனவரி 14ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்ட குறித்த வினாத்தாள்கள் திருத்தப்பட்டு அவற்றிற்கான புள்ளிகள் வழங்கப்பட்டதுடன், குறித்த வினாத்தாள்களின் விடைகள் மற்றும் விளக்கங்கள் செயலமர்வு வடிவில் சம்பிரதாய பூர்வமாக 03.02.2026 அன்று மட்/களுதாவளை மகா வித்தியாலயத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு. லு. ஸ்ரீதரன் அவர்களின் பங்களிப்புடன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த விளக்க செயலமர்வு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 12 நிலையங்களில், Manitha Neyam Trust நிதிப்பங்களிப்பின் கீழ், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஏற்பாட்டில் 5 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு. S. ஸ்ரீதரன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன், மட்/களுதாவளை மகா வித்தியாலயத்தின் அதிபர் உட்பட, சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதுடன், அவர்கள் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடைய உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மாணவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கான முக்கியமான பங்களிப்பாகும். convert to english

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Seminar for O/L Students of the Batticaloa – Pattiruppu Education Zone

On the occasion of Swami Vivekananda’s 164th birthday, Manitha Neyam Trust and Vivekananda College of Technology (VCOT) jointly launched a special educational support program for students preparing for the G.C.E. (O/L) examinations.

Under this program, model question papers for five major subjects were officially handed over to Mr. S. Sridharan, Education Officer of the Pattiruppu Education Zone, on 12th January 2026, and to Mr. T. Anandarupan, Education Officer of the Kalkuda Education Zone, on 14th January 2026.

Subsequently, the question papers provided to the Pattiruppu Education Zone were corrected, marks were allocated, and the answers and explanations were presented in a practical explanatory session held on 03.02.2026 at Mattakkalappu Maha Vidyalayam, organized with the support of Mr. L. Sridharan, Education Officer of the Pattiruppu Education Zone, and initiated through the efforts of Mr. K. Pratheeswaran, Executive Officer of Vivekananda College of Technology.

Meanwhile, the explanatory sessions will be conducted across 12 centers for students studying in all schools under the Pattiruppu Education Zone, organized by Vivekananda College of Technology with funding support from Manitha Neyam Trust, over a period of 5 days.

The event was attended by Mr. S. Sridharan, Education Officer of the Pattiruppu Education Zone, Mr. K. Pratheeswaran, Executive Officer of Vivekananda College of Technology, the principal of Mattakkalappu Maha Vidyalayam, as well as students preparing for the ordinary level examinations.

The main objective of this initiative is to enhance students’ academic skills and assist them in achieving better results in the O/L examinations.

This effort, undertaken to build a strong future for the students, represents an important contribution to the development of education in the Batticaloa District.