இலங்கை புகையிரத திணைக்களமானது கொழும்பு மற்றும் மட்டக்களப்பு இடையேயான புதிய ரயில் நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த நேர அட்டவணையானது இன்றிலிருந்து (24.03.2025 ) அமுல்படுத்தப்படவுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அட்டவணையின் படி, “பாடூமீன்” மற்றும் “புலதிசி” ஆகிய இரண்டு புகையிரதங்கள் ஒவ்வொரு நாளும் கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்பு இடையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடுமீன் புகையிரதம்
கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 23:00 மணிக்கு புறப்பட்டு காலை 06:45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மட்டக்களப்பிலிருந்து மாலை 19:40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 04:16 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்
புலதிசி புகையிரதம்
கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 15:15 மணிக்கு புறப்பட்டு இரவு 22:38 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01:30 மணிக்கு புறப்பட்டு காலை 09:01 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
மேலதிக தகவல்களுக்கு பயணிகள் அருகிலுள்ள புகையிரத நிலையங்களை அணுகலாம் அல்லது இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Sri Lanka Railway Department’s New Timetable
The Sri Lanka Railway Department has released a new train timetable for the Colombo-Batticaloa route. This revised timetable will come into effect from today (24.03.2025).
According to the updated schedule, two trains, “Padumeen” and “Pulathisi”, will operate daily between Colombo Fort and Batticaloa.
Padumeen Train Schedule:
- Departs from Colombo Fort at 23:00 (11:00 PM) and arrives in Batticaloa at 06:45 (6:45 AM).
- Departs from Batticaloa at 19:40 (7:40 PM) and arrives in Colombo Fort at 04:16 (4:16 AM).
Pulathisi Train Schedule:
- Departs from Colombo Fort at 15:15 (3:15 PM) and arrives in Batticaloa at 22:38 (10:38 PM).
- Departs from Batticaloa at 01:30 (1:30 AM) and arrives in Colombo Fort at 09:01 (9:01 AM).
For more information, passengers are advised to contact the nearest railway station or visit the official website of the Sri Lanka Railway Department at https://www.railway.gov.lk/.
For more news visit us Maatram News