இலங்கையின் இறுதி நொடிகள்

இலங்கையின் இறுதி நொடிகள்

இலங்கையின் இறுதி நொடிகள்

“இலங்கையின் இறுதி நொடிகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கையின் இறுதி மன்னர் ஆட்சி காலம் மற்றும் இலங்கை எவ்வாறு பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் காலணித்துவ நாடாக காணப்பட்டது போன்ற விடயங்களை இந்த கட்டுரையினூடாக இங்கே பார்கலாம்.

🌍முதலாவதாக ஐரோப்பியர்கள் ஏன் ஆசியாவை நோக்கி படையெடுத்து தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த எண்ணினார்கள் என்கிற கேள்விக்கு பதில் ஐரோப்பாவில் “ஆசியாவானது
தங்கம், வைரம், இரத்தினம் மற்றும் வாசனைத்திரவியங்கள் கொட்டிக்கிடக்கும் சொர்க்க பூமி” என நிலவிய விம்பமே காரணமாக உள்ளது.

ஆரம்ப காலத்தில் ஐரோப்பியர்களுக்கு முன்னதாக ஆசியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன.

இதன் விளைவாக ஆசியாவை அடைவதையே இலக்காக கொண்டு செயற்பட்டனர் ஐரோப்பியர்கள். இவ்வாறான பின்னனியிலேயே பல நாடுகாண் பயணங்கள் நடைபெற்றது. இவ்வாறான நாடுகாண் பயணங்களுக்கு ஐரோப்பிய மன்னர்களும் தங்களது முழு ஆதரவையும் வழங்கினர்.

இதன் விளைவாக வில்லியம் லோகன் எழுதிய ‘மலபார் மேனுவல்’ நூலில், போர்த்துகீசத்தில் இருந்து “1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல்,
சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள்,
மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள்.

இவ்வாறு தான் முதல் முதலில் ஆசியாவிற்கு போர்த்துகேயர் வருகை தந்தனர்.

இதனை சுருக்கமாக கீழே ஆண்டுகளுடன் பார்க்கலாம்

1️⃣ போர்த்துகீசியர்கள் (Portuguese) 1505 – 1658 இலங்கை வரலாற்றில் முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள். கொழும்பு, யாழ்ப்பாணம், திருக்கோணமலை பகுதிகளை கைப்பற்றினர். கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள்.

2️⃣ ஒலந்தர்/ டச்சு (Dutch)1658 – 1796 போர்த்துகீசியர்களை விரட்டி, அதிக வர்த்தக கட்டுப்பாடுகளை நிறுவினர்.

3️⃣ ஆங்கிலேயர்கள் (British) 1796 – 1948 ஒலந்தரை வீழ்த்தி இலங்கை முழுவதையும் 1815ல் கைப்பற்றி, 1948 இலங்கை சுதந்திரம் பெறும் வரை ஆட்சி புரிந்தனர்.

♦இவ்வாறான பின்னணியில் 223 ஆண்டுகள் இலங்கையில் வெளிநாட்டவர்களால் கைப்பற்ற முடியாமல் இருந்த இயற்கை அரண்கள் நிறைந்த வளம் மிக்க சுதந்திர பிரதேசமாக விளங்கியதும் ஐரோப்பியரின்
ஆதிக்கத்திற்குள்ளான இலங்கை கரையோர மக்களால் மன்னனாக போற்றப்பட்ட கண்டிய இறுதி மன்னனின் ஆட்சிகாலம் பற்றி பார்க்கலாம்.

கண்டி இராச்சியம்

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

1592 இல் இலங்கையில் பல பிரிவுகளாக பிளவுபட்டிருந்த இராட்சியங்கள் பலவீனமடைந்து கொண்டிருந்தன. இதன் காரணமாக போர்த்துக்கேயர்கள் தங்களது அதிகாரத்தை இலகுவாக நிலை
நிறுத்திக்கொண்டிருந்த நிலையிலேயே கண்டி இராச்சியம் முதலாம் விமலதர்மசூரிய மன்னனால் 1592 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

👑 கண்டி இராச்சியின் முக்கிய அரசர்கள் & ஆண்டுகள்

1️⃣முதலாம் விமலதர்மசூரியன் 1592 – 1604 ஆட்சி புரிந்தார். இவரே கண்டி இராச்சியின் நிறுவனர். போர்த்துகீசியர்களுடன் பல யுத்தங்கள் புரிந்த இவர் பௌத்த மதத்தை வலுப்படுத்தினார்.

2️⃣சேனரத்தன் (Senarat) 1604–1635 வரை ஆட்சி புரிந்தார். மென்மையான அரசராக இவர் கருதப்படுகின்றார். இவருடைய காலத்தில் போர்கள் இடம்பெற்றதற்கான தரவுகள் இல்லை

3️⃣ இரண்டாம் ராஜசிங்கன் 1635–1687 வரை ஆட்சி புரிந்தார். இவர் ஒல்லாந்தரை இந்நாட்டில் இருந்து விரட்டுவதற்காக பிரித்தானியர்களுடன் இணைந்து செயற்பட்டார்.

4️⃣இரண்டாம் விமலதர்மசூரியன் 1687–1707 வரை ஆட்சி புரிந்தார்.

5️⃣வீரநரேந்திரசிங்கம் 1707–1739 வரை ஆட்சி செய்தார். இவர் சிங்கள வம்சத்தின் கடைசி அரசர் என்று சொல்லப்படுகின்றது. பிள்ளைகள் இல்லை என்பதுடன் இவருக்கு அடுத்ததாக நாயக்க மன்னர்கள் ஆட்சி ஆரம்பமானது.

6️⃣ஸ்ரீ விஜயராஜசிங்கன் 1739–1747 வரை ஆட்சி செய்தார். முதல் நாயக்க மன்னர் (தெலுங்கு வம்சம்). தமிழ் பேசும் நாயக்கர்இ பௌத்த மதத்தை ஆதரித்தார்.

7️⃣கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் 1747–1782 வரை ஆட்சி செய்தார். பிரபல நாயக்க மன்னர். பௌத்த மத வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கினார்.

8️⃣ராஜாதி ராஜசிங்கன் 1782–1798 வரை ஆட்சி செய்தார். இவரது காலத்தில் அரசாங்கம் பலவீனமானது. ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டது.

9️⃣ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் 1798–1815 வரை ஆட்சி செய்தார். இலங்கையின் கடைசி மன்னர்.

கண்டி இராட்சியத்தின் இறுதி மன்னாக தென்னிந்திய வம்சாவளியின் நாயக்கர் வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் கணப்படுகிறார்.

🔲ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது மனைவியின் தம்பியான கண்ணுசாமியை ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் மரணித்த பின்னர் கண்டியின் கண்டியரசின் பிரதம பிரதானியான பிலிமத்தலாவ ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் என்ற பெயரில் கண்ணுசாமிக்கு 1798 ஆம் ஆண்டு முடி சூட்டினர்.

🔲இவரது காலப்பகுதியில் 1803 ஆம் ஆண்டில் கண்டியை பிரித்தானியர்கள் கைப்பற்றியபோது மன்னர் அரசியுடன் தப்பிச்சென்று தலைமறைவானார்.

🔲இருந்தபோதிலும் மன்னர் மீது மக்களுக்கு இருந்த மரியாதை மற்றும் விசுவசம் காரணமாக மீண்டும் மன்னர் பிரித்தானிய படையை விரட்டியடித்துவிட்டு ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தது.

🔲மீண்டும் தங்களை பலப்படுத்திக்கொண்ட பிரித்தானியர் 1815 ஆம் ஆண்டு மீண்டும் கண்டியை கைப்பற்றியதுடன் மன்னனையும் இலகுவாக கைது செய்தனர்.

🔲இம்முறை மக்கள் எவரும் மன்னனுக்கு ஆதரவு வழங்கவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக வரலாற்றில் பெயர் குறிப்பிடப்படும் நபர் ஜேன் டொய்லி என்பவரே.

🔲பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் நிர்வாக அதிகாரி ஜோன் டொய்லி கண்டியை கைப்பற்றுவதையே தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருந்தார். இவர் கண்டியை போரினால் கைப்பற்ற முடியாது
தந்திரத்தால் மாத்திரமே அது சாத்தியம் என்பதையும் நன்கு அறிந்திருந்தார்.

🔲1803 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்டிய மன்னனுடனான போர் தோல்வியடைய முக்கிய காரணம் மன்னன் மீது மக்களுக்கும் பிரதானிகளுக்கும் இருந்த விசுவாசமே இதனை இல்லாது செய்வது மட்டுமே
கண்டியை கைப்பற்ற முழுமையான வழி என்பதை அறிந்திருந்த ஜோன் டொய்லி மன்னரது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காக மன்னரை மதுவுக்கு அடிமையாக்க தூண்டினார். காலப்போக்கில் மதுவுக்கு
அடிமையான மன்னன் கொடூரமான செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

🔲தன்னை எதிர்க்கும் பிரதானிகளுக்கும் மக்களுக்கும் பாரபட்சமின்றி மிக மோசமான தண்டனைகளை வழங்கினார். பிற்காலத்தில் இது மக்கள் மத்தியில் மன்னனை பற்றிய
மோசமான எண்ணம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

🔲இதன் விளைவாகவே கண்டி பிரதானிகளும் மக்களும் தங்கள் சுதந்திர இராட்சியத்தை பிரித்தானியர்களுக்கு தாங்களே வழங்கவேண்டியதாயிற்கு.இதன் பின்னர் மகா நாயக்க பிக்குகள் மற்றும் முக்கிய அரச மந்திரிகள் முன்னிலையில் கண்டி நகரில் உள்ள மஹா நுவர மாளிகை வளாகத்தில் பிரித்தானிய ஆளுநர் ரொபட் பிரௌன்றிக் முன்னிலையில் கண்டிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

🔲இந்த கண்டிய ஒப்பந்தத்தை சேர்.ஜோன் டொய்லி எழுதியதாக கூறப்படுகின்றது.1815 ஆம் ஆண்டு பிரித்தானிய படையால் கைது செய்யப்பட்ட மன்னன் இந்தியாவின் வேலூர் சிறைச்சாலைக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் அங்கே சிறைவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

🔲இறுதியாக 17 ஆண்டுகள் சிறையிலிருந்த மன்னன் 1832 ஜனவரி 30 வேலூரில் சிறையில் இருக்கும்போதே மரணம் அடைந்தார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Author – Showmini.S (Journalist)

Sri Lanka’s final moments

Under the title “The Last Moments of Sri Lanka”, this article explores the last reign of Sri Lanka and how Sri Lanka became a colonial country under British rule.

🌍First of all, the answer to the question of why Europeans wanted to invade Asia and establish their dominance is the image that prevailed in Europe that “Asia is a paradise land full of gold, diamonds, gems and spices”.

In the early days, Arabs and Persians, who reached Asia before the Europeans, had established their trading centers here. Europe received spices from Muslim traders, especially in the southern Indian region of Malabar (Kerala).

As a result, Europeans worked with the goal of reaching Asia. Many expeditions took place against this backdrop. European kings also gave their full support to such expeditions.

As a result, in the book ‘Malabar Manual’ written by William Logan, it is mentioned that “Vasco da Gama’s fleet, which left Portugal in 1497, consisted of three ships, the São Rafael, the São Gabriel, and the São Miguel. Each ship had officers, sailors, and servants.”

When Vasco da Gama first arrived in India, he came with a very small force. Although there are different information about how many people are found in history books, one thing is certain – there were also convicts on his ship.

This is how the Portuguese first arrived in Asia.

We can see this briefly below with the years

1️⃣ Portuguese (Portuguese) 1505 – 1658 The first Europeans to arrive in Sri Lanka. They conquered Colombo, Jaffna, and Trincomalee. They belonged to the Catholic religion.

2️⃣ Dutch (1658 – 1796) drove out the Portuguese and established more trade restrictions.

3️⃣The British defeated the Dutch in 1796 – 1948 and conquered the entire island of Sri Lanka in 1815, ruling until Sri Lanka gained independence in 1948.

♦In this context, for 223 years, Sri Lanka was a rich and independent territory with natural fortifications that could not be conquered by foreigners, and the reign of the last king of Kandyan, who was revered as a king by the people of the coastal areas of Sri Lanka under European domination, can be seen.

The Kingdom of Kandyan

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

In 1592, the kingdoms that had been divided into several factions in Sri Lanka were weakening. Due to this, the Kingdom of Kandyan was formed in 1592 by King Wimaladharmasuriya I, while the Portuguese were easily establishing their power.

👑 Important Kings & Years of the Kingdom of Kandy

1️⃣Wimaladharmasuriyan I ruled from 1592 to 1604. He was the founder of the Kingdom of Kandy. He fought many wars with the Portuguese and strengthened Buddhism.

2️⃣Senarat ruled from 1604 to 1635. He is considered a gentle king. There is no evidence of any wars during his reign

3️⃣ Rajasinghe II ruled from 1635 to 1687. He worked with the British to expel the Dutch from the country.

4️⃣Wimaladharmasuriyan II ruled from 1687 to 1707.

5️⃣Veeranarendrasingam ruled from 1707–1739. He is said to be the last king of the Sinhala dynasty. He had no children and was succeeded by the Nayaka kings.

6️⃣Sri Vijayarajasinghan ruled from 1739–1747. The first Nayaka king (Telugu dynasty). The Tamil-speaking Nayaka king supported Buddhism.

7️⃣Keerthi Sri Rajasinghan ruled from 1747–1782. A famous Nayaka king. He made a great contribution to the development of Buddhism.

8️⃣Rajathi Rajasinghan ruled from 1782–1798. During his time, the government was weak. There was chaos in the government.

9️⃣Sri Wickrama Rajasinghan ruled from 1798–1815. The last king of Sri Lanka.

The last king of the Kandy Kingdom was Sri Wickrama Rajasinghe, a member of the Nayak dynasty of South Indian origin.

🔲Since Sri Rajathi Rajasinghe had no children, his wife’s younger brother Kannusamy was crowned as the Prime Minister of the Kandyan Kingdom of Kandy in 1798 after the death of Sri Rajathi Rajasinghe.

🔲During his reign, when the British captured Kandy in 1803, the king fled with his queen and went into hiding.

🔲However, the respect and trust of the people towards the king allowed the king to drive away the British army and ascend the throne.

🔲The British, who had strengthened themselves again, captured Kandy again in 1815 and easily arrested the king.

🔲This time, none of the people supported the king. The main reason for all this is the person whose name is mentioned in history, Jane Doyle.

🔲John Doyle, the executive officer of the British East India Company, had the goal of capturing Kandy as his life’s goal. He knew very well that Kandy could not be captured by war, but only by trickery.

🔲The main reason for the defeat of the war with the Kandyan king in 1803 was the loyalty of the people and the chiefs to the king, and knowing that the only way to capture Kandy was to do this, John Doyle, who knew that the only way to capture Kandy was to destroy it, persuaded the king to become addicted to alcohol in order to tarnish the king’s name. Over time, the king, who was addicted to alcohol, began to engage in cruel acts.

🔲He gave the worst punishments to the chiefs and people who opposed him without any discrimination. Later, this caused the people to have a bad opinion of the king.

🔲As a result, the chiefs and people of Kandy had to surrender their independent kingdom to the British. After this, the Treaty of Kandyan was signed in the presence of the Mahanayaka monks and important government ministers in the presence of the British Governor Robert Brownrick at the Maha Nuwara Malai complex in Kandy.

🔲This Treaty of Kandyan is said to have been written by Sir John Doyle. It is said that the king, who was arrested by the British army in 1815, was deported to the Vellore prison in India and was later imprisoned there.

🔲Finally, the king, who was imprisoned for 17 years, died in prison in Vellore on January 30, 1832.

Author – Showmini.S (Journalist)