விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் கருப்பொருளில் Students of Mat/Karaiyakandivu Ganesar Vidyalayam Visit the College சமுதாயத்தை மையப்படுத்தியதாகப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் கல்லூரியைப் பார்வையிடும் வண்ணம் மட்/கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரம் 9 – தரம் 11 வரையிலான மாணவ மாணவிகள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் முதல்வர் மற்றும் பயிற்சி உத்தியோகத்தரால் கல்லூரியின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு NVQ கல்வி முறைமை பற்றிய விளக்கமும் தொழிற்கல்வி மற்றும் எதிர்காலத்தில் கணினிக் கல்வியின் அவசியமும் தெளிவூட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியைப் பார்வையிட்டதோடு Chess, Carom, Archery என வெளிக்கள செயற்பாடுகளிலும் கலந்து சிறப்பித்தமை சிறப்பானதாகும்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடாக மாத்திரமின்றி மாணவர்களின் தொழிலுக்கான வழிகாட்டலாகவும் அமையும்.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Students of Mat/Karaiyakandivu Ganesar Vidyalayam Visit the College
Vivekananda College of Technology has been carrying out various community-centered activities under the theme “Empowering Social and Economic Transformation.”
Accordingly, the principal, teachers, and students from Grade 9 to Grade 11 of Mat/Karaiyakandivu Ganesar Vidyalayam visited the college to observe and learn about its programs.
The principal and the training officer of the college provided an introduction to the college’s activities, along with an explanation of the NVQ education system, the importance of vocational education, and the growing necessity of computer education in the future.
Following this, the students toured the college and also actively participated in outdoor activities such as chess, carrom, and archery, making the visit even more meaningful.
By conducting such activities, the college not only raises awareness among students but also serves as a guide for their future career development.

