அவரை இனப் பயிர்களின் விவசாயத்தில் இன்றியமையாத ரைசோபியம்
அவரை இனப் பயிர்களின் விவசாயத்தில் இன்றியமையாத ரைசோபியம்

அவரை இனப் பயிர்களின் விவசாயத்தில் இன்றியமையாத ரைசோபியம்

அவரை இனப் பயிர்களின் விவசாயத்தில் இன்றியமையாத ரைசோபியம்

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

ரைசோபியம் என்பது ஒரு பாக்டீரியா இனத்தைச் சேர்ந்த நைட்ரஜன் பதிக்கும் நுண்ணுயிர் ஆகும்.
முதன் முதலில் அமெரிக்காவிலேயே ரைசோபியம் விவசாயத்துறையில்
1930 இல் அறிமுகம் செய்யப்பட்டு, தனியார் துறையில் 1932 இல் ப்ரெட் என்பவரால் இது வணிக ரீதியாக பிரபலப்படுத்தப்பட்டது. பின்னர்
சோயா அவரைத் தாவரங்களில் ரைசோபியம் நல்ல விளைச்சலை ஏற்படுத்தியது.

இந்த நுண்ணுயிர், அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களுடன் ஒன்றிய வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்களில் வேர் முடிச்சுகளை உண்டாக்குகிறது.
ரைசோபியம் நுண்ணுயிரி பயன்பாட்டால் நைட்ரஜன் உரப் பயன்பாடு குறைக்கப்பட முடிவதுடன், 5% – 20% அதிக விளைச்சலையும் தருகிறது. மேலும், பயிர்களின் வேர்களில் இருந்து கசியும் வேர்க் கசிவுகளும், வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் பொருள்களும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன.

ரைசோபியம் பொதுவாக மண்ணின் கீழ் வளர்கிறது. இவை 25 முதல் 30°C வெப்பநிலையில் வேர் முடிச்சுகளை உருவாக்குகின்றன.
இவற்றின் வளர்ச்சிக்கு உகந்த pH 6-7 (அமில – காரத்தன்மை) ஆகும்.

உபயோகப்படுத்தும் முறைகள்:
10 கிலோ விதைகளுக்கு 300 கிராம் ரைசோபியம் போதுமானது.
கொம்போஸ், மண் அல்லது கரித்தூளில் கலக்கப்பட்ட ரைசோபியம் நுண்ணுயிரை ஒரு தேநீர் கோப்பை அளவு அரிசிக் கஞ்சியில் (250 ml) கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும்.
இந்தக் கலவையில் தேவையான அளவு விதைகளை இட்டு, எல்லா விதைகளிலும் கலவை ஒட்டிக் கொள்ளுமாறு நன்றாகக் கலக்க வேண்டும்.
கலந்த விதைகளை 1 முதல் 3 மணி நேரம் நிழலில் உலர்த்தி உடனடியாக விதைக்கலாம்.

இலங்கையில் இவற்றின் பயன்பாடு ஓரளவுக்கு தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் மற்றும் வடமத்திய மாகாணத்தில் மோராகஹகந்த, வடமேல் மாகாணங்களில் குருநாகல் – அனுராதபுரம் பகுதிகளிலும்,
வடமாகாணத்தில் வவுனியாவில் ஒருசில இடங்களிலும், யாழ்ப்பாணத்தில் சில இடங்களிலும் உளுந்து மற்றும் கச்சான் (நிலக்கடலை) செய்கையிலும், மட்டக்களப்பில் மற்றும் அம்பாறையில் சில பண்ணைகளில் கச்சான் செய்கையில் பயன்படுத்தப்படுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

கச்சான், உளுந்து மட்டுமின்றி, கவ்பி, பயறு, பருப்பு வகைகள், சோயா, பயற்றை, போஞ்சி, சிறகவரை, தட்டை அவரை போன்ற அவரை இனப் பயிர்களுக்கும் பயன்படுத்த முடியும்.

90 ஆண்டுகளுக்கு முன்னரே வர்த்தக சந்தைக்கு வந்துவிட்ட ரைசோபியம் இதுவரைக்கும் இலங்கையில் விவசாயிகளிடையே பரவலாக அறியப்படாமல் இருப்பது, விவசாயத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் துரதிருஷ்டவசமாக நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளோம் என்பதை நன்கு வெளிக்காட்டுகிறது.
எனவே, அரசாங்கம் இவற்றை விரைவில் உள்ளூர் சந்தைகளுக்கு அங்கீகரிப்பதானது இயற்கை விவசாயத்தின் இன்னொரு மைல்கல்லாக அமையும்.

மேலதிக விபரங்களுக்கு:
📞 CSJ Agri
076 225 0017

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

The Importance of Rhizobium in Legume Cultivation

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

Rhizobium is a nitrogen-fixing microorganism belonging to the bacterial group.
It was first introduced in the agricultural sector in the United States in 1930, and in 1932, Fred made it commercially popular in the private sector. Later, the use of Rhizobium in soybean cultivation showed excellent yield improvements.

This microorganism lives symbiotically with leguminous crops and forms root nodules on their roots. The use of Rhizobium can significantly reduce the need for nitrogen fertilizers while also providing a 5%–20% increase in yield. Additionally, substances released from root exudates and nodules enhance soil fertility.

Rhizobium generally grows underground and forms nodules at temperatures between 25°C and 30°C. The ideal soil pH for its growth ranges from 6 to 7 (slightly acidic to neutral).

Application Method:

  • 300 grams of Rhizobium culture is sufficient for 10 kilograms of seeds.
  • Mix the Rhizobium culture (which can be combined with compost, soil, or charcoal powder) with about 250 ml of rice gruel (kanji) to prepare a paste.
  • Add the required quantity of seeds into this mixture and stir well until all the seeds are evenly coated.
  • Dry the coated seeds in the shade for 1–3 hours and sow immediately afterward.

In Sri Lanka, the use of Rhizobium has been observed mainly in:

  • The Hambantota area in the Southern Province,
  • Moragahakanda in the North Central Province,
  • Kurunegala–Anuradhapura regions in the North Western Province,
  • Parts of Vavuniya in the Northern Province, and
  • Some farms in Batticaloa and Ampara districts, especially for groundnut and black gram cultivation.

Besides groundnut and black gram, Rhizobium can also be used for cowpea, green gram, lentils, soybean, pigeon pea, winged bean, and cluster bean crops.

Although Rhizobium entered the commercial market more than 90 years ago, it is still not widely known among Sri Lankan farmers. This clearly shows how far behind we remain in agricultural advancement compared to other countries.

Therefore, government recognition and local market approval of such natural biofertilizers would mark another significant milestone in promoting organic farming.

For further information:
CSJ Agri
📞 076 225 0017