கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக, பதவிப்பிரமாணம் செய்யும் பேராசிரியர் தெ.சுந்தரேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட முந்நாள் பீடாதிபதியும், பொது மருத்துவத்துறை பேராசிரியருமாகிய தெட்சிணாமூர்த்தி சுந்தரேசன் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
உயர்கல்வித் துறையில், தேசிய இசர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட கல்விப் பணிகளை ஆற்றிவரும் பேராசிரியர் சுந்தரேசன், சிறந்த மனிதநேயப் பணியாளராக, பல சமூக மற்றும் ஆன்மீக அமைப்புகள் ஊடாக தனது பணிகளைச் செய்து வருகிறார்.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் இருதய சிகிச்சையினை இலவசமாகச் செய்துவரும் சஞ்சீவி வைத்தியசாலைப் பணிகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சேவைக்கு அப்பால், சிறந்த கல்வியலாளராக திகழ்ந்து வரும் பேராசிரியர் சுந்தரேசன், சிறந்த ஆய்வாளராகவும், சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
சமூக மேம்பாட்டின் பொருட்டு, பல செயலூக்க கருத்தரங்கங்களுக்கு வளவாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அறிவுப் பகிர்வின் அவசியத்தை உணர்ந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தளங்களில் மருத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில், பல் பரிமாண ஆளுமையாளராக தனது நேர்மையான பாதையில், கிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய அனைத்துத் தகைமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளவர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.



Professor The. Sundaresan to be sworn in as the Principal of the Eastern University Trincomalee Campus
Sivananda National School alumnus, former Dean of the Faculty of Medicine, Eastern University and Professor of General Medicine, Thetchinamoorthy Sundaresan, took oath as the Principal of the Trincomalee Campus of the Eastern University.
Professor Sundaresan, who has been involved in various educational activities both nationally and internationally in the field of higher education, is an excellent humanitarian and is working through several social and spiritual organizations.
In this regard, his role in the work of Sanjeevi Hospital, which provides free cardiac treatment to thousands of people in the Batticaloa district, is noteworthy.
Beyond medical service, Professor Sundaresan, who is an excellent educationist, is an excellent researcher and has written more than 50 research articles and several books.
He has also been a resource person for many active seminars for social development. Realizing the need for knowledge sharing, he has participated in more than 30 medical and social awareness interviews on television and YouTube platforms. Overall, as a multi-dimensional personality, he has all the qualifications to provide excellent leadership to the Eastern University, Trincomalee campus in his honest path. My congratulations to Professor Sundaresan Cher, the foremost among those whom I will always respect, as Sivanandyan.