சந்தையில் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு?
சந்தையில் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு?

சந்தையில் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு?

சந்தையில் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு?

சந்தையில் கீரி சம்பா அரிசிக்குப் பற்றாக்குறை இருப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள், கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் வழங்குவதால், அதை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சில்லறை விற்பனையாளர்களும் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனிடையே, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்கி இலாபம் ஈட்ட முயற்சிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இலங்கை சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு?

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

There is a shortage of Keeri Samba in the market

Consumers are alleging a shortage of Keeri Samba rice in the market.

It has been reported that Pukkottai rice wholesalers and rice producers are avoiding selling Keeri Samba rice as it is being offered at a price higher than the control price of Rs. 260.

In view of this, retailers are also avoiding selling Keeri Samba rice.

Meanwhile, the United Rice Producers Association has requested the government to remove the maximum retail price imposed on Samba and Keeri Samba rice.

However, they have also pointed out that large-scale rice mill owners may try to create an artificial rice shortage and make a profit.

The Sri Lanka Small and Medium Rice Mill Owners Association has urged that no steps be taken to remove the maximum retail price of rice in such cases.

The National Farmers’ Union has requested the government to intervene immediately in this matter and provide solutions to this problem.

It is also noteworthy that groups including the Farmers’ Association will visit the Presidential Secretariat today to demand a solution to this issue.