தலைமைத்துவத்தின் மூன்று வகைகள் (Three Types of Leadership)
ஒரு உண்மையான தலைவரின் பலம் அவர் எவ்வாறு தனது குழுவை வழிநடத்துகிறார் என்பதில்தான் தெரிகிறது. ஒரு தலைவன் முன்னிலையிலிருந்து வழிநடத்துகிறாரா? பக்கத்தில் இருந்து இணைந்து செய்கிறாரா? அல்லது பின்னால் இருந்து ஊக்கப்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தி வளரச்செய்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான விடையே “தலைமைத்துவத்தின் மூன்று வகைகள்” என்ற கருத்து.
1. முன்னிலையிலிருந்து வழிநடத்துதல் (Leading from the Front)
இந்த வகைத் தலைவர்கள் முதலில் சென்று முன்னுதாரணம் காட்டுவோர். அவர்கள் குழுவிடம் “நீங்கள் இதைச் செய்யுங்கள்” என்று சொல்வதில்லை “நான் இவ்வாறுதான் செய்தேன் இதே போல் உங்களாலும் செய்யமுடியும் எனக்கூடிய அவர்களுக்கு செயற்படுத்தி காட்டுவதுடன் அவர்களுடன் இணைந்து வேலை செய்வேன் என்ற நம்பிக்கையினையும் ஏற்படுத்துகின்றார்.

உதாரணங்கள்
• ஒரு போர் நேரத்தில் முன்னணியில் நின்று போர்புரிகின்ற வீரராக இருக்கும் படைத்தளபதி.
• நிறுவனத்தில் புதிய திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் விளக்கி, குழுவினருக்கு முன்மாதிரியாக நிற்கும் CEO.
மகாத்மா காந்தி – சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜி முன்னிலையிலிருந்து நடந்தார். அத்துடன் சத்தியாகிரகம் போன்ற இயக்கங்களில் அவர் நேரடியாக பங்கேற்றார். இதனால் பொதுமக்கள் உற்சாகம் பெற்று தன்னார்வத்துடன் இணைந்தனர்.
இன்றைய சூழலில் எப்படி பயன்படுத்தலாம்?
• ஒரு பாடசாலை அல்லது கல்லூரியின் முதல்வர், மாணவர்களிடம் கட்டுப்பாட்டை வலியுறுத்தி அவர்களை செய்யவைப்பதனை விட அவர்கள் முன், தாமே ஒழுங்கைக் கடைப்பிடித்தல். இது அவர்களிற்கு ஒரு முன்மாதிரியான செயலாக நினைக்கத்தோன்றும். இதன் மூலமாக மாணவர்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
• ஒரு நிறுவனம் புதிதான ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கினால், நிறுவனத்தின் தலைவரே அந்த பொருளை முதலில் பயன்படுத்துவதுடன் அது பற்றி தனது நட்பு மற்றும் ஏனைய பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளல்.
2. பக்கத்தில் இருந்து வழிநடத்துதல் (Leading from the Side)
இந்த வகைத் தலைவர்கள் குழுவின் பங்காளியாக இருப்பார்கள். அவர்கள் மேலிருந்து உத்தரவிடாமல், பக்கத்தில் நின்று ஊக்குவிப்பார்கள். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஏனையோர் போல் அவரும் ஒரு பகுதி பணியினை தனது பணியாக எடுத்து செய்வார்.

உதாரணங்கள்
• ஒரு திட்ட முகாமையாளர், குழுவுடன் இணைந்து வேலை செய்து, அவர்களின் சிரமங்களை புரிந்து கொண்டு தீர்வு காண்பது.
• ஆசிரியர் ஒருவர், மாணவர்களுடன் குழு செயல்பாடுகளில் இணைந்து செயல்படுவது.
நெல்சன் மண்டேலா – ஜனநாயகப் போராட்டத்தின் போது அவர் மக்களுடன் பக்கத்தில் இருந்து உரையாடி, ஒற்றுமையை உருவாக்கினார். அவர் மக்கள் இயக்கத்தின் “ஒரு பங்குதான்” எனும் எண்ணத்தை ஊக்குவித்தார்.
இன்றைய சூழலில் எப்படி பயன்படுத்தலாம்?
• தொழில்நுட்ப நிறுவனங்களில், முகாமையாளர் பக்கத்தில் இருந்து software developers எதிர்நோக்கும் சவால்களுக்கு அவருடன் இணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பது.
• NGO-களில், தலைவர் ஏனைய அனைத்து சமூக உறுப்பினர்களுடன் இணைந்து செயல் திட்டங்களை வடிவமைத்தல். செயற்படுத்தும் போது அவர்களுடன் கூடவே இருத்தல்.
- பின்னால் இருந்து வழிநடத்துதல் (Leading from the Back)
இந்த வகைத் தலைவர்கள் பிறரை முன்னிலைப்படுத்தி அவர்களுக்குத் தலைமைத்துவ வாய்ப்பை அளிப்பவர்கள். அவர்கள் “தான் செய்தது” என்பதை விட, “குழு செய்தது” என்பதைக் சுட்டிக்காட்டுவார்கள். இதுதான் இரண்டாம் நிலை முகாமைத்துவத்தினை உருவாக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உதாரணங்கள்
• ஒரு ஆசிரியர், மாணவர்களுக்கு திட்டங்களை ஒப்படைத்து அவர்கள் தானாகவே குழுவை வழிநடத்த வழிவகை செய்வது.
• நிறுவனம் ஒன்றில், தலைவர் அனைத்து கீர்த்தியையும் தமக்கென்று எடுத்துக்கொள்ளாமல், குழுவினருக்கே புகழை வழங்குவது.
1979-ல், SLV-3 செயற்கைக் கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது. அப்போது திட்டப் பணிப்பாளராக இருந்த அப்துல் கலாம் அவர்களை பாதுகாப்பதற்காக, ISRO தலைவர் சதீஷ் தவான் பத்திரிகையாளர்களிடம் சென்று பொறுப்பை தான் ஏற்றார்.
ஆனால் அடுத்த ஆண்டு (18 ஜூலை 1980) Rohini RS-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டபோது, அதற்கான புகழை அவர் அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினருக்கே வழங்கி பத்திரிகை பேட்டிக்கு அனுப்பி வைத்தார்.
இன்றைய சூழலில் எப்படி பயன்படுத்தலாம்?
• ஒரு பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்குத் தன்னாட்சியை அளித்து, அவர்கள் புதிய கற்பித்தல் முறைகளை முயற்சிக்க ஊக்குவித்தல்.
• நிறுவனம் ஒன்றின் தலைவர், project presentation-களை junior staff-க்கு ஒப்படைத்து, அவர்களை முன்னிலைப்படுத்துதல்.
எந்த வகை சிறந்தது?
• முன்னிலையிலிருந்து வழிநடத்துதல் – அவசர நிலைமைகளில் (crisis management) மிகச் சிறந்தது.
• பக்கத்தில் இருந்து வழிநடத்துதல் – குழுவின் ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும்.
• பின்னால் இருந்து வழிநடத்துதல் – புதிய தலைவர்களை உருவாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் சிறந்தது.
உண்மையான தலைவர்கள் இம்மூன்றையும் சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துவதே முக்கியம்.
“தலைமைத்துவத்தின் மூன்று வகைகள்” என்ற இந்தக் கருத்து ஒவ்வொரு சூழலிலும் ஒரு தலைவருக்கான வழிகாட்டியாகும். முன்னிலையிலிருந்து, பக்கத்தில் இருந்து, பின்னால் இருந்து — இந்த மூன்று பாதைகளையும் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் தலைவரே தலைமைத்துவத்தில் வெற்றியாளராகிறார்.
8 தலைமைத்துவ கருவிகளை பற்றி தெளிவுபடுத்துவதற்கான எனது தொடர் கட்டுரையின் 2வது பகுதியான இந்த தலைமைத்துவத்தின் 3 வகைகள் என்ற பகுதி பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர் கட்டுரையின் அடுத்ததாக தலைமைத்துவத்தில் 6 முக்கிய பாணிகள் என்ற கருவி பற்றிய விபரத்தினை எதிர்பாருங்கள்
கடந்த கட்டுரையினை படிக்காவிட்டால் அதனை தெரிந்துகொள்ள இந்த இணைப்பினை பயன்படுத்தவும்
https://maatramnews.com/news/leadership-is-not-just-a-position/

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Three Types of Leadership
The strength of a true leader is seen in how he leads his team. Does a leader lead from the front? Does he collaborate from the side? Or does he inspire and build trust from behind? The answer to these questions is the concept of “Three Types of Leadership.”
- Leading from the Front
These types of leaders are the ones who go first and set an example. They don’t tell the team, “You do this,” they tell them, “I did this, you can do the same.” They show them how to do it and build trust with them.
Examples: • A commander who is the first to fight in a war. • A CEO who is the first to introduce a new project in the company, explain it to customers, and set an example for the team.
Mahatma Gandhi – Gandhiji led the freedom struggle. He also participated directly in movements like Satyagraha. This inspired the public and helped them join in voluntarily.
How can it be used in today’s context? • The principal of a school or college, rather than imposing control on the students and making them do it, should practice discipline himself. This will make them think of it as an exemplary act. This will change the minds of the students.
When a company starts manufacturing a new product, the company president is the first to use the product and tell his friends and other people about it. Sharing with employees.
- Leading from the Side
This type of leader is a partner in the team. They do not give orders from above, but stand by and encourage. They also take part in the activities of the company like others.
Examples
- A project manager works with the team, understands their difficulties and finds solutions.
- A teacher works with students in group activities.
Nelson Mandela – During the democratic struggle, he spoke to the people from the side and created unity. He promoted the idea of “being a part” of the people’s movement.
How can it be used in today’s context?
- In technology companies, the manager solves the problems faced by software developers from the side.
- In NGOs, the leader designs action plans with all other community members. Be with them during implementation.
Leading from the Back
This type Leaders are those who put others first and give them leadership opportunities. They will point out “the team did it” rather than “I did it.” This is very helpful in creating secondary management.
Examples
- A teacher assigns projects to students and allows them to lead the team on their own.
- In an organization, a leader does not take all the credit for himself but gives credit to the team.
In 1979, the SLV-3 satellite launch attempt failed. To protect Abdul Kalam, who was the project director at the time, ISRO Chairman Satish Dhawan went to the press and took responsibility.
But the next year (18 July 1980) when the Rohini RS-1 satellite was successfully launched, he gave credit to Abdul Kalam and his team and sent it to the press for an interview.
How can it be used in today’s context?
- A school principal gives autonomy to teachers and encourages them to try new teaching methods Motivation.
- A company leader hands out project presentations to junior staff and leads them.
Which type is best?
- Leading from the front – Best in crisis management.
- Leading from the side – Helps build team cohesion.
- Leading from behind – Best for developing new leaders and encouraging innovation.
It is important for true leaders to use all three according to the situation.
This concept of “three types of leadership” is a guide for a leader in every situation. From the front, from the side, and from behind — the leader who learns and implements these three paths becomes a winner in leadership.
Share your thoughts on this part of my series explaining the 8 leadership tools, the 3 types of leadership. Expect the next part of the series to be about the tool called 6 main styles in leadership.
If you haven’t read the previous article, use this link to learn about it