Titanic Love-Symbol Watch Auctioned
Titanic Love-Symbol Watch Auctioned

டைட்டானிக் காதலின் சின்னமான கடிகாரம் ஏலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் நீத்த Titanic Love-Symbol Watch Auctioned முதல் வகுப்புப் பயணி இசிடோர் ஸ்ட்ராஸ் என்பவருக்குச் சொந்தமான 18 காரட் தங்கம் பதிக்கப்பட்ட கடிகாரம், 1.78 மில்லியனுக்கு யூரோவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது, டைட்டானிக் நினைவுப் பொருட்களுக்காக இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகையாக உலக சாதனை படைத்துள்ளது.

ஜூல்ஸ் ஜூர்கென்சன் நிறுவனத்தின் வேலைப்பாடு மிகுந்த இந்தக் கடிகாரம், 1888ஆம் ஆண்டு இசிடோர் ஸ்ட்ராஸுக்கு அவரது 43வது பிறந்தநாளுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.

அதே ஆண்டிலேயே, அவர் நியூயோர்க்கின் புகழ்பெற்ற ‘மேசிஸ்’ பல்பொருள் அங்காடியின் பங்காளராகவும் ஆனார்.

டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூழ்கியபோது, அவரது வயதின் காரணமாக இசிடோர் ஸ்ட்ராஸுக்கு முதலில் உயிர் காக்கும் படகில் இடம் வழங்கப்பட்டது.

ஆனால், அவர் பிற ஆண்களுக்கு முன் செல்ல மறுக்கவே, அவரது மனைவி ஐடா ஸ்ட்ராஸும் அவரைப் பிரிய மனமின்றி அவருடனேயே இருக்கத் தீர்மானித்தார்.

இருவரும் இறுதிவரை ஒருவரையொருவர் அணைத்தபடி தங்கள் விதியை எதிர்கொண்டனர், அவர்களின் இந்த உருக்கமான காதல் கதை ‘டைட்டானிக்’ திரைப்படத்திலும் சித்தரிக்கப்பட்டது.

விபத்துக்குப் பிறகு, இசிடோர் ஸ்ட்ராஸின் உடல் மீட்கப்பட்டபோது இந்தக் கடிகாரமும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விள்ட்சயரில் உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அண்ட் சன் ஏல நிறுவனத்தில் இந்த கடிகாரம் ஏலத்தில் விடப்பட்டதுடன், டைட்டானிக் தொடர்பான பொருட்களுக்கான புதிய சாதனையையும்.

இதற்கு முன்னர், டைட்டானிக் பயணிகளைக் காப்பாற்றிய மீட்புக் கப்பலின் தலைவருக்கு வழங்கப்பட்ட மற்றொரு தங்கக் கடிகாரம் 1.56 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போனதே முன்னைய சாதனையாக இருந்தது.

மேலும், ஐடா ஸ்ட்ராஸ் டைட்டானிக் கப்பலின் தாளில் எழுதிய கடிதம் ஒன்றும் 100,000 யூரோவுக்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Titanic Love-Symbol Watch Auctioned

An 18-carat gold watch belonging to Isidor Straus, a first-class passenger who lost his life in the historic Titanic disaster, has been sold at auction for 1.78 million euros.

This has set a world record as the highest amount ever paid for a Titanic memorabilia item.

This exquisitely crafted watch, made by Jules Jurgensen, was gifted to Isidor Straus on his 43rd birthday in 1888.

In the same year, he also became a partner of New York’s famous Macy’s department store.

When the Titanic sank in April 1912, Isidor Straus was initially offered a place on a lifeboat due to his age.

However, he refused to go ahead of other men, and his wife Ida Straus, unwilling to leave him, decided to stay with him.

The couple embraced each other until the very end, facing their fate together — a moving love story also depicted in the film Titanic.

After the disaster, when Isidor Straus’s body was recovered, the watch was returned to his family.

The watch was auctioned at Henry Aldridge & Son in Wiltshire, setting a new record for Titanic-related items.

Previously, the record was held by another gold watch presented to the captain of a rescue boat that saved Titanic passengers, which sold for 1.56 million euros.

Additionally, a letter written by Ida Straus on Titanic stationery was also sold for 100,000 euros.