இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்
மேஷராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.
ரிஷபராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக் காக செலவு செய்ய நேரும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு, தண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்டவேண்டாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனைக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மிதுனராசி அன்பர்களே!
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
கடகராசி அன்பர்களே!
அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
சிம்மராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.
கன்னிராசி அன்பர்களே!
தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.
துலாராசி அன்பர்களே!
சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபா ரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
விருச்சிகராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும்.
தனுசுராசி அன்பர்களே!
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
மகரராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சலுகைகளும் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கும்பராசி அன்பர்களே!
மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை.
மீனராசி அன்பர்களே!
எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.
உடனுக்குடன் தகவல்களை பெற மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பார்வையிடவும்.

Today’s horoscope
Dear Aries!
Avoid new endeavors. Pay some attention to your health. Even if expenses arise due to the visit of relatives in the family, it will be a happy expense. The expected thing from maternal relatives will turn out to be beneficial. Be considerate of your colleagues in the office. Although there may be problems with employees in business, you will be able to handle them.
Dear Taurus!
An exciting day. The alienation between husband and wife will increase. You will have to spend money on children. When going out, do not be negligent in the matter of food and water. Some people may have the opportunity to buy new clothes and jewelry. Your wise advice in the office will receive appreciation and gifts. Sales and profits in business will be as expected.
Dear Gemini!
Today will be a day of achievement. You will act with confidence. There will be happiness in the family. Children will accept your advice. You will buy what they ask for. Some people also have the opportunity to receive unexpected money. You will help your colleagues in their work at the office. You will be excited as you will get more sales and profits in business.
Cancerians!
It will be a favorable day. The expected work in the government sector may end favorably. You will get profit from your father. Some people may incur unnecessary expenses. You will fulfill the needs of your spouse. The workload in the office will increase. However, you will also get corresponding benefits. You will get expected profits in business. However, problems may arise due to fellow businessmen.
Leoians!
An enthusiastic day. You will work actively. The visit of relatives will bring happiness to the family. A new venture will end favorably. Long-awaited money may be received today. The intimacy between husband and wife will increase. There is a possibility of getting the expected benefits in the office. Sales and profits in business will be as usual.
Virgoians!
It will be a day full of divine favor. You will go to the temple with your family and worship. You will fulfill your mother’s wish. You will get the expected help from your maternal uncle. Even if you get money, there may be sudden expenses. The office will be normal. Sales and profits in business will be modest. Get a job by hiring employees.
Libra people!
It will be a day of achievement. There is a chance of unexpected wealth from your spouse. The relationship between husband and wife will increase. You will fulfill the needs of your children. There is a chance of getting the loan you have given back. Even if the workload in the office increases, your colleagues will help. You will get more profit in business.
Scorpio people!
It is better to start new ventures in the afternoon. Avoid foreign trips. There will be advantages in matters in the afternoon. There will be happiness in the family. You will fulfill your father’s needs. You will work enthusiastically in the office. You will get the expected concession today. Since the cooperation of employees in business is good, sales will increase.
Dear Sagittarius!
It is better to be patient in everything. There may be indirect troubles and criticism from others. Although there may be a minor embarrassment in the family, it will not have any impact. If you are making an important decision related to the family, it is better to think twice before making it. You need to pay more attention to your work at the office. Sales and profits in business will be modest.
Dear Capricorn!
Avoid new endeavors and trips. You also need to pay more attention to your regular work. Even if your health is slightly affected, it will be resolved immediately with proper treatment. Patience is necessary as there may be differences of opinion with relatives. Even if your responsibilities increase in the office, you will be happy as you will get benefits. Sales in business will be modest.
Dear Aquarius!
A happy day. The bond between husband and wife will increase. You will fulfill the needs of the family. You may receive good news from relatives. Be careful with your work at the office. Do not interfere in the affairs of your colleagues. Although some problems may arise in business due to employees, there is no harm in it.
Pisces dears!
The work undertaken will be beneficial. You will get the expected help from relatives. Your health will improve. New endeavors will be favorable. Some people will also have the opportunity to receive unexpected money. There will be an enthusiastic atmosphere in the office. You will get support from the management. Troubles caused by fellow businessmen in business will be resolved. Profits will be more than expected.