இன்றைய இராசி பலன்
மேஷராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
ரிஷபராசி அன்பர்களே!
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் ஆதாயம் ஏற்படும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர்.
மிதுனராசி அன்பர்களே!
மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிது அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
கடகராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் விலகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.
சிம்மராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். ஆனால், உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
கன்னிராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முடிவுகளைத் தெளிவாகச் சிந்தித்து எடுப்பீர் கள். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர் கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
துலாராசி அன்பர்களே!
மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில் களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
விருச்சிகராசி அன்பர்களே!
இன்று காரியங்கள் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விலகும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார் கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சங்கடம் ஏற்படும்.
தனுசுராசி அன்பர்களே!
அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மகரராசி அன்பர்களே!
உற்சாகமான நாளாக இருக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.
கும்பராசி அன்பர்களே!
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையுடன் வீண் வாக்கு வாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பொறுமை அவசியம்.
மீனராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களுடன் விவாதம் செய்ய நேரிட்டால் விலகிச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Today’s Horoscope
Aries
New initiatives will end successfully. There may be expenses through your father’s side. Siblings may come seeking your help. Some may receive unexpected financial gains. In the afternoon, relatives’ visits might cause some discomfort, but there will be no serious issues. Mutual affection between husband and wife will increase. There is a chance of receiving the expected benefits at work. Business will run as usual.
Taurus
Government-related matters will be resolved favorably. Expected help from your father’s side will arrive. Mutual affection between husband and wife will grow. Gains will come through your spouse’s relatives. You will be happy to fulfill your mother’s needs. The atmosphere at work will be lively. Co-workers will cooperate harmoniously. In business, you will get the expected profits. Employees will be cooperative.
Gemini
Minor confusions may arise in your mind but will fade away. Avoid starting new ventures. You may face some strain while fulfilling your mother’s needs. Children may cause a few inconveniences. Avoid eating outside food. In the evening, there will be a chance to visit a temple with family. At the office, there may be some issues caused by colleagues. In business, it’s important to deal politely with customers.
Cancer
A lively and energetic day. It is best to start new ventures in the morning itself. Some may get the chance to fulfill religious vows. Troubles caused by enemies will go away. Visits from relatives will bring happiness. Matters related to siblings will end favorably after some delays. The workload at the office may increase, but colleagues will help. Obstacles in business caused by fellow traders will be removed.
Leo
Favorable outcomes in your activities. You may receive good news through your spouse’s side. However, you need to pay some attention to your health today. Mutual affection between husband and wife will grow. Friends may approach you for help. You will be happy to fulfill your mother’s wishes. The workplace will have a lively atmosphere. Authorities will be supportive. Business sales and profits will increase.
Virgo
Confidence and courage will increase. You will make decisions with clear thinking. Younger siblings will seek your advice. Some may receive long-awaited good news. Expected government-related matters will be resolved favorably. The workload at the office may increase, but you will complete it enthusiastically. Co-workers will be supportive. Business profits will be higher than usual.
Libra
A joyful day. There may be unexpected financial gains. However, avoid starting new ventures. Some may get a chance to visit temples located in other towns. In the evening, there may be opportunities to attend special functions or feasts. The work atmosphere will be as usual. Authorities will be supportive. In business, expenses may arise due to employees.
Scorpio
Small obstacles may arise in completing tasks but will be resolved. You may often feel mentally tired, but it will pass. There could be some discomfort caused by your maternal relatives. Practice patience when talking to others. Expected tasks from friends may be delayed. The workload at the office may be high, but colleagues will help. Business sales will be moderate. Employees may cause some inconveniences.
Sagittarius
A lucky day. There is a chance of unexpected material gains. Expected matters through your spouse’s side will be resolved favorably. Differences of opinion between husband and wife will fade, and mutual affection will grow. Your mother’s love and support will bring happiness. The work environment will be cheerful. Expected benefits may be received today. Business sales and profits will rise.
Capricorn
A lively day. Government-related matters will go in your favor. However, there could be some discomfort regarding siblings. Some may receive unexpected material gains. Differences of opinion with your father will disappear, and his love and support will be felt. With less workload at the office, you will feel energetic. Avoid interfering in co-workers’ matters. Business will run as usual.
Aquarius
Do not start new ventures today. Practice patience when talking to others. Minor mental confusions will arise but will pass. Avoid unnecessary arguments with your father. Even if relatives speak harshly, patience is necessary. Extra care will be needed in office work. Be cooperative with colleagues. In business, customer-related issues may arise, so patience is important.
Pisces
It is better to start new ventures in the afternoon. Patience is necessary in all matters today. If you get into a debate with others, it is better to walk away. Relatives’ visits may cause some family discomfort. Expenses may arise because of children. Heavy workload at the office may cause fatigue. Problems in business may arise due to fellow traders, so patience is essential.