Trophies School Memorial day

நினைவு தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கான வெற்றிக்கிண்ணங்கள்

“கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், அறக்கட்டளையின் நீண்டநாள் நன்கொடையாளராகிய திரு.கோபாலு பகீரதன் அவர்களின் தாயாராகிய திருமதி.அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் 4ம் ஆண்டு நினைவுதினத்தினையொட்டி மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக அவர்களின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர்,மற்றும் சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி மாத்திரமன்றி உடல் ரீதியான செயற்பாடுகளும் விளையாட்டுக்களும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Trophies for the School in Commemoration of the Memorial Day

As part of the initiative “Empowering Villages for Transformation,” the Mavilangathurai village was selected for various educational and developmental projects aimed at uplifting students pursuing higher education. These initiatives, led by the Vivekananda Community Foundation, focus on providing essential support to students in multiple ways.

The foundation has implemented programs such as monthly financial assistance for students in advanced-level education, basic computer training programs to enhance digital literacy, and educational materials for moral and ethical learning. Additionally, life skills training workshops are conducted to develop essential competencies, and awards and gifts are given to students who successfully complete their Ordinary and Advanced Level examinations.

Continuing its commitment to social development, the Vivekananda Community Foundation recently contributed championship trophies for the annual sports competition at Mavilangathurai Vigneswara Vidyalayam. This initiative was undertaken in response to a request from the school, in honor of the 4th memorial anniversary of the late Mrs. Annapakkiyam Gopalu, mother of Mr. Gopalu Bhagirathan, a long-time benefactor of the foundation.

The event was attended by the Project Manager and dedicated volunteers of the Vivekananda Community Foundation, who actively participated in the proceedings. Their presence highlighted the foundation’s ongoing dedication to supporting students and fostering holistic development within the community.

It is important to recognize that the growth and progress of the younger generation are not solely dependent on academic education. Physical activities and sports also play a significant role in shaping young minds. Engaging in sports helps develop discipline, teamwork, resilience, and leadership qualities, which are crucial for overall personal development.

Through these initiatives, the foundation continues to empower young minds, foster community growth, and create lasting impacts in rural areas. By ensuring that both education and extracurricular activities receive equal attention, the foundation paves the way for a brighter and more promising future for students.

For More Information Join Our Whatsapp Community Maatram News