விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனத்தால் மேலும் 7 மாணவர்கள் பொறுப்பெடுப்பு
புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப் பொருளின் கீழ், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை முன்னெடுத்து செயற்படுத்தும் மாணவர்களைப் பொறுப்பெடுக்கும் திட்டமானது கடந்த 6 ஆண்டுகளாக 162 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இத்திட்டத்தின் வழியாக, மேலும் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நோக்குடன், எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதன் மூலம் அவர்களது கல்வியில் இடைநிறுத்தம் ஏற்படாமல் தடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் திரு.எஸ்.லோகேந்திரா அவர்கள் 5 மாணவர்களையும் அமெரிக்காவைச் சேர்ந்த திரு.சி.செந்தில்செல்வன் அவர்கள் 2 மாணவர்களையும் உள்ளடக்கியதாக மேலும் ஏழு மாணவர்களை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு அம்மாணவர்களுக்கு திட்டம் பற்றிய தெளிவூட்டலும் வழங்கப்பட்டதோடு இச்செயற்பாட்டில், திட்ட முகாமையாளருள்ளிட்ட சேவையாளர்களும் பங்கேற்றமை சிறப்பானதாகும்.
இச் செயற்பாடுகள் மூலம் வறுமையைக் குறைக்க முடியாதெனினும், வறுமைக்கோட்டிற்குள் வாழும் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என்பதில் மாற்றமில்லை.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Seven More Students Taken Under Care by the Vivekananda Community Foundation
Under the theme “Empowering Change in Students with the Support of the Diaspora”, the student sponsorship program carried out by the Vivekananda Community Foundation has been in operation for the past six years, supporting a total of 162 students.
Through this program, with the collaboration of our diaspora partners, new students are selected and provided with a monthly stipend. The main objective of this initiative is to prevent interruptions in their education due to financial difficulties.
In this regard, Mr. S. Logendra, residing in the United States, has taken responsibility for five students, while Mr. C. Senthilselvan, also from the United States, has undertaken sponsorship for two students—making a total of seven new students under this initiative. An orientation program was also conducted for these students, during which they were given a detailed introduction to the project. Project coordinators and volunteers participated actively in this occasion.
Although such activities may not eliminate poverty entirely, they play a vital role in reducing school dropouts among students from low-income families and in strengthening their pathway to future success.