இலங்கைக்கு இரு பதக்கங்கள்
இலங்கைக்கு இரு பதக்கங்கள்

இலங்கைக்கு இரு பதக்கங்கள்

இலங்கைக்கு இரு பதக்கங்கள்

பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 23.10.2025 நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 52.32 வினாடிகளில் நிறைவு செய்து நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இதேவேளை, ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த தங்கப் பதக்கத்தை வென்றார்.

போட்டியை நிறைவு செய்ய அவர் 3 நிமிடங்கள் 57.42 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஓர் இலங்கையர் வென்ற முதல் தங்கப் பதக்கமாக இது பதிவானது.

இப் பதக்கத்துடன், இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 02 ஆக உயர்ந்தது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Two Medals for Sri Lanka

At the Asian Youth Games currently being held in Bahrain, Nethmi Kimhani won the bronze medal in the women’s 1500-meter race held on October 23, 2025, finishing the event in 4 minutes and 52.32 seconds.

This marks Sri Lanka’s first medal in the ongoing competition.

Meanwhile, in the men’s 1500-meter race held yesterday, Lahiru Achintha claimed the gold medal, completing the event in 3 minutes and 57.42 seconds.

This is recorded as the first-ever gold medal won by a Sri Lankan athlete in the history of the Asian Youth Games.

With this achievement, the total number of medals won by Sri Lanka in the tournament has risen to two.