பாடசாலை கல்வியின் பின்னரான மாணவர்களுக்கு பின்தங்கிய பிரதேசங்கள் தோறும் வாழ்வியல் மற்றும் வழிகாட்டல் செயல்பாடுகளை VCOT சமுதாய கல்லூரி ஊடாக மேற்கொண்டு வருகின்றது.
கடந்த காலங்களில் இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய தலைவராக சேவையாற்றிய வைத்தியகலாநிதி.வே.பரமநாதன் அவர்கள் மட்டக்களப்பில் உள்ள VCOT சமுதாய கல்லூரிக்கு விஜயம் செய்த போது அடிப்படை கணினி மற்றும் வாழ்வியல் பயிற்சி செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டு இவ்வாறான செயல்பாடுகள் ஏனைய பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



அதனடிப்படையில் தனது பிறப்பிடமான வடமாகாண சாவகச்சேரி மாவட்டத்தின் உசன் கிராமத்தில் இவ்வாறு பாடசாலைக் கல்வியின் பின்னராக மாணவர்களிற்கு சமுதாய கல்லூரி செயல்பாடு முன்னெடுப்பதற்காக 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையத்தின் ஆரம்ப நிகழ்விற்கு அழைத்ததோடு அதற்கான ஆலோசனை மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளிற்கான வழிகாட்டலையும், இணையவழியின் ஊடான பயிற்சிகளையும் நடைமுறைப்படுத்த VCOT சமுதாய கல்லூரி பணிப்பாளரிடம் கோரியிருந்தார்.



இதன் அடிப்படையில் வாழ்வியல் மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகளுடன் அடிப்படை கணினி பயிற்சிகளை சாவகச்சேரி நகரத்திலும் வழங்குவதற்கு வாய்ப்பினை வழங்கிய சிறந்த நன்கொடையாளரும் சமூக பற்றாளருமாகிய வைத்தியகலாநிதி.வே.பரமநாதன் அவர்களுக்கும், உசன் பவுண்டேசன் உறுப்பினர்கள், கிராம சமூக நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் VCOT சமுதாய கல்லூரி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது .
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
VCOT Community College Expands Life Skills & Guidance Programs to Chavakachcheri
VCOT Community College has been actively implementing life skills and guidance programs across underprivileged regions, focusing on students who have completed their school education. These initiatives aim to equip students with essential skills that enhance their employability and personal development.


During a visit to VCOT Community College in Batticaloa, Dr. V. Paramanathan, a former chairman of the London Kanagathurkkai Amman Temple and a renowned medical professional, was deeply impressed by the basic computer training and life skills programs being conducted. Acknowledging the importance of such programs, he strongly advocated for their expansion into other regions to benefit more students.
As a result, he took the initiative to introduce a community college program in his hometown, Ushan village in Chavakachcheri, Northern Province. The inaugural event of the new center was held on March 23, 2025 (Sunday), where Dr. Paramanathan not only participated but also provided valuable guidance and strategic recommendations for the long-term sustainability of the initiative. Additionally, he requested the VCOT Community College management to facilitate online training programs to ensure continuous learning opportunities for students.
Based on his vision, basic computer training and life skills programs will now also be extended to Chavakachcheri town, enabling students from the region to access quality education and vocational training.

VCOT Community College expresses its sincere gratitude to Dr. V. Paramanathan for his generous support, social commitment, and philanthropic efforts. The institution also extends appreciation to Ushan Foundation members, local community leaders, school representatives, and well-wishers who have contributed to making this initiative a reality.
This expansion marks a significant step towards empowering students in underserved areas, equipping them with the necessary skills for a brighter future.
For more news visit us Maatram News