வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு Warning for People in the Northern and Eastern Provinces தெரிவித்துள்ளது.
குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.
மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.
அண்மைக்காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகவும் கூறி, பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். எனவே வடக்கு கிழக்கு மக்கள் இணைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Warning for People in the Northern and Eastern Provinces
The police media division has reported a rise in financial scams conducted via the internet and social media in the northern and eastern provinces.
Specifically, there have been continuous reports of fraud carried out using platforms such as Telegram, WhatsApp, and other social media groups.
Scammers deceive the public to obtain sensitive information such as bank account numbers, passwords, and QR codes.
They then entice victims by offering online job opportunities, asking them to transfer money to various accounts, thereby involving them in financial fraud.
Recently, there have been large-scale financial scams, particularly targeting people with claims of job opportunities in European countries or higher education prospects.
The police have therefore advised residents of the northern and eastern provinces to exercise caution and remain vigilant against internet scams.

