இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Heavy rain with thunderstorms: Warning to the public
Heavy rainfall of up to 75 mm is expected at some places in the Western and Sabaragamuwa provinces and in the Nuwara Eliya, Kandy, Galle and Matara districts.
The Department of Meteorology stated this in a statement issued today, Wednesday.
It is reported that there will be occasional showers in the Western, Sabaragamuwa and Central provinces and in the Galle and Matara districts.
In addition, strong winds of up to 55-60 kmph are expected in the western slopes of the Central Highlands, the Northern, North-Central and Central provinces and in the Trincomalee and Hambantota districts.
It is reported that there will be several showers in the North-Western province and the Hambantota district.
It is also noted that adequate precautions have been taken to minimize the damage caused by temporarily localized strong winds and lightning strikes during thunderstorms.