Will Books Written by Humans Become Rare Luxury Goods in the Future?
Will Books Written by Humans Become Rare Luxury Goods in the Future?

மனிதர்கள் எழுதும் புத்தகங்கள் எதிர்காலத்தில் அரிதான ஆடம்பரப் பொருளாக மாறுமா?

செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக எதிர்காலத்தில் மனிதர்களால் எழுதப்படும் Will Books Written by Humans Become Rare Luxury Goods in the Future? புத்தகங்கள் மற்றும் நாவல்கள் ‘அரிதான ஆடம்பரப் பொருளாக’ (Rare Luxury Goods) மாறும் என்று நாவலாசிரியர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், AI உலக இலக்கியச் சந்தையை ஒரு ‘இரட்டை அடுக்குச் சந்தையாக’ (Two-tier market) மாற்றும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேம்பிரிட்ஜ் அறிக்கையின் முதன்மை ஆராய்ச்சியாளர், கிளெமென்டைன் காலெட் (Dr. Clémentine Collett), இது பெரிய சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், எனவே இலக்கியத் துறையைப் பாதுகாக்க AI-ஐச் சுற்றி பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை (Guardrails)விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வின்படி, இங்கிலாந்தின் வெளியீட்டுத் துறையில் உள்ள 51% நாவலாசிரியர்கள், AI தங்களது பணியைத் முழுவதுமாக அபகரித்துவிடும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, புனைகதை (Fiction) எழுதுபவர்கள் மத்தியில் இந்த அச்சம் அதிகமாக உள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், ஜெனெரேட்டிவ் AI கருவிகள் (Generative AI tools) மற்றும் LLM (Large Language Model) மூலம் எழுதப்பட்ட புத்தகங்கள் சந்தையில் அதிகரிப்பது குறித்து கடுமையான அச்சம் நிலவுவது தெரியவந்துள்ளது.

இது பதிப்புரிமை மீறல், வருவாய் இழப்பு மற்றும் கலை வடிவத்தின் எதிர்காலம் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Will Books Written by Humans Become Rare Luxury Goods in the Future?

Novelists fear that, due to artificial intelligence (AI), books and novels written by humans may one day become rare luxury goods.

They also warn that AI could turn the global literary market into a two-tier market.

These findings were revealed in a study conducted by the University of Cambridge in the United Kingdom.

Dr. Clémentine Collett, the lead researcher of the Cambridge report, stated that this could have major social impacts, and therefore AI must be regulated with proper guardrails to protect the literary industry.

According to the study, 51% of novelists in the UK publishing industry fear that AI will completely take over their work.

This fear is particularly strong among fiction writers.

The Cambridge study further found that there is serious anxiety about the increasing number of books being written using generative AI tools and LLMs (Large Language Models).

This rise has sparked concerns about copyright violations, loss of income, and the future of the art form itself.