Will Sri Lanka play six T20 matches in January?
Will Sri Lanka play six T20 matches in January?

ஜனவரியில் ஆறு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி?

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி இருபதுக்கு 20 உலகக் Will Sri Lanka play six T20 matches in January? கிண்ணத்துக்கான தயார்ப்படுத்தலுக்கான ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆறு இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு ஒளிபரப்பு உரிமைகளுக்காக வெளியிடப்பட்ட “விருப்பம் தெரிவிக்கும் அறிவிப்பு” மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் ஜனவரி 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் ஜனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன், இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் தொடர் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் தொடருக்கான இறுதி ஏற்பாடுகள் நிறைவடைந்தவுடன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்துக்கான புனரமைப்புக்கு உட்படுத்தப்பட உள்ளதால், பெரும்பாலான இருபதுக்கு 20 போட்டிகள் தம்புள்ளையில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆறு இருபதுக்கு 20 போட்டிகள், உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணிக்கு இரண்டு முன்னணி அணிகளுக்கு எதிராகக் கிடைக்கும் முக்கியமான தயாரிப்புக் கட்டமாக அமையவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Will Sri Lanka play six T20 matches in January?

As part of their preparations for next year’s ICC T20 World Cup, Sri Lanka Cricket is reportedly planning to host six T20 International matches in the early part of 2026.

This information has come to light through the “Expression of Interest” notice issued for domestic broadcast rights.

Accordingly, a three-match T20 series against Pakistan is scheduled to be held from January 8 to January 12. In addition, a three-match T20 series against England is set to take place from January 30 to February 3. The England team is also expected to play a three-match ODI series.

While the official announcement regarding the Pakistan series has not yet been released, Sri Lanka Cricket has confirmed the England tour. The announcement for the Pakistan series is expected once the final arrangements are completed.

Since the R. Premadasa International Cricket Stadium in Colombo and the Pallekele International Cricket Stadium in Kandy will undergo renovations in preparation for the T20 World Cup, most of the T20 matches are likely to be played in Dambulla.

These six T20 matches will serve as an important preparatory phase for the Sri Lankan team, giving them the opportunity to compete against two leading sides ahead of the World Cup.