தற்போது உலகெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் மகளிரை வாழ்த்தும் வண்ணம் மகளிர் தினக் கொண்டாட்டமானது 19 .03 .2025 ஆம் திகதி விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு K பிரதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சிணகௌரி தினேஷ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு சமூக நலன்புரி அமைப்பு, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,அமிர்தா நிறுவனம் உள்ளிட்ட சேவையாளர்களும் கல்லூரியின் பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.



சமூக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக சுயதொழில் மேற்கொள்வதற்கான ஊக்குவிப்புத்தொகையைப் பெற்றுக்கொண்டு விவசாயம், கோழி வளர்ப்பு, ஆடை உற்பத்தி, நெசவுக் கைத்தொழில், சீவல்,பற்பொடி உற்பத்தி என பல்வேறு துறை சார்ந்த சுயதொழிலை மேற்கொள்ளும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்த 10 பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பரிசில்களையும் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் சுயதொழில் ஒன்றை மேற்கொள்வதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து அவர்களுக்கான ஊக்குவிப்புத்தொகை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் முன்னெடுத்த வாழ்வாதார செயற்பாடுகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பிலும் அவர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



அதனை தொடர்ந்து , மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சிணகௌரி தினேஷ் அவர்களுக்கு விவேகானந்த குடும்பத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அவரது சிறப்பு உரையில் இன்றைய கால கட்டத்தில் மகளிர் தினத்தினை கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றியும் மகளிரின் அர்ப்பணிப்பு பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Women’s Day Celebration 2025
Women’s Day is celebrated worldwide, recognizing the contributions and achievements of women across various fields. In this spirit, a special Women’s Day celebration was held on March 19, 2025, at Vivekananda College of Technology to honor and appreciate women from families led by women.
The event was presided over by Mr. K. Pratheeswaran, the Executive Director of Vivekananda College of Technology. Ms. Dhatsinagowri Dinesh, the Divisional Secretary of Manmunai West, graced the occasion as the chief guest. The event also witnessed the participation of representatives from social welfare organizations, Vivekananda Community Foundation, Amirda Organization, service providers, and trainees from the institute.



Encouraging Women Entrepreneurs
As part of the initiative, women from women-led households who have ventured into self-employment were recognized and supported. With the assistance of social welfare organizations and the Vivekananda Community Foundation, financial grants were awarded to 10 women entrepreneurs engaged in various fields, including:
- Agriculture
- Poultry farming
- Garment production
- Weaving and handloom industry
- Handicrafts and traditional crafts
- Herbal and natural toothpaste production
These women not only received financial support but also guidance and mentorship to further develop their businesses. They shared their experiences on how they embarked on their entrepreneurial journey, the challenges they overcame, and the positive impact their efforts had on their standard of living.



Recognizing Women’s Contribution
Following this, a special felicitation ceremony was held to honor Ms. Dhatsinagowri Dinesh, the Divisional Secretary of Manmunai West. As a token of appreciation, a commemorative memento was presented to her by the Vivekananda family.
In her keynote speech, Ms.Dhatsinagowri Dinesh emphasized the importance of celebrating Women’s Day in today’s society. She highlighted the dedication, resilience, and contributions of women across various domains and underscored the need for continued efforts in empowering women to achieve greater success.
The event concluded with inspiring discussions on women’s empowerment, self-sufficiency, and the need for collective efforts to create a more inclusive and supportive environment for women entrepreneurs.
For more news visit us Maatram News

