மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை வழங்குதல் தொடர்பிலான செயலமர்வு
மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை வழங்குதல் தொடர்பிலான செயலமர்வு

மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை வழங்குதல் தொடர்பிலான செயலமர்வு

மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை வழங்குதல் தொடர்பிலான செயலமர்வு

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகம் மற்றும் மேற்படிப்பிற்காக செல்கின்ற போதிலும், அநேகமானோர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை தவறவிடுவதுடன், மேற்படிப்பை எவ்வாறு தொடர்வது என்கின்ற வழிகாட்டல்கள் இன்றி கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகுகின்றனர். மேலும் சிலர் பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிடுகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்காலத்தில் சமூகம் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, தற்போது சில தனியார் துறையினர் பல்வேறு தொழில் வழிகாட்டல் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து, அவர்கள் வெளியேறுவதற்கு முன்பதாக பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு மாணவர்களால் தொழில் பயிற்றுவிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றபோதிலும், மாணவர்களின் மனநலம் இதில் பெரும் பங்காற்றுகின்றது. இந்த நிலையில், மாணவர்களின் மனநிலையை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் வளவாளர்கள் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயலமர்வு யுனைடட் போட் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் 06.10.2025 தொடக்கம் 09.10.2025 வரை நடைபெற்றது.

மட்டக்களப்பில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த செயலமர்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்கள், மியாமி உறுப்பினர்கள், சென்ட் ஜோன்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன், இதில் 50 பங்குபற்றாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை வழங்குதல் தொடர்பிலான செயலமர்வு

மேலும், இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது வளவாளர்களாக இந்தியாவில் இருந்து வருகை தந்த டாக்டர் சரினா மக்ரூப்இ டாக்டர் வீணா சதீஷ்இ ஜெலின் பால், ஷெரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டு “Healing to Empower” என்ற தலைப்பில் 4 நாட்கள் செயலமர்வை மிக சிறப்பாக வழங்கியிருந்தனர்.

இந்த செயலமர்வின் முக்கிய கவனம் பெரும்பாலும் Gen Z மாணவர்கள் மற்றும் அவர்களின் மனநலம், எதிர்காலத் திட்டமிடல் திறன்கள், மற்றும் கல்வி மற்றும் வாழ்க்கை சவால்களை சமாளிக்கும் முறைகள் மீது இருந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சிகளில், மாணவர்களின் மனநிலை மேம்பாடு, உணர்ச்சி கையாளல், ஆழமான கேள்வி கேட்கும் திறன், மற்றும் மனநலம் தொடர்பான பல்வேறு நோய்கள் மற்றும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவை முக்கியமாக கையாளப்பட்டன.

மாணவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை வழங்குதல் தொடர்பிலான செயலமர்வு

இதில் Depression, Bipolar Affective Disorder, Schizophrenia, Dementia, Substance Use Disorders, Female Mental Health மற்றும் Autism Spectrum Disorders போன்ற தலைப்புகளில் தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்றன.

மேலும், மனஅழுத்தத்தை, நோய் எதிர்ப்பு, பாதுகாப்பு, கல்வி திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Workshop on Understanding Students’ Mental Health and Providing Career-Oriented Education

Although a certain number of students successfully pass their examinations and move on to university or higher studies, many others miss the opportunity to enter universities or discontinue their studies due to a lack of proper guidance on how to pursue further education. Some even drop out of school midway, and this rising trend poses a serious risk to the future of society.

Considering this concern, several private institutions have recently initiated career guidance and vocational training programs to help students identify suitable career paths. However, vocational educators and trainers often face challenges while training students, particularly before they leave the institution. Among the various reasons behind these challenges, students’ mental health plays a crucial role.

In light of this, a special workshop aimed at helping teachers and facilitators understand students’ mental states and guide them accordingly was organized by United Board from October 6 to October 9, 2025.

The four-day program, held at the American Mission Hall in Batticaloa, was attended by resource persons from Vivekananda College of Technology, members from MIAMI and St. John’s institutions, and a total of 50 participants who benefited from the sessions.

At the end of the program, certificates were awarded to all participants.

The workshop was conducted under the theme “Healing to Empower” by expert facilitators from India, including Dr. Zarina Makroob, Dr. Veena Satheesh, Ms. Jelin Paul, and Ms. Sherin Fernando, who delivered insightful sessions over the four days.

The workshop primarily focused on Gen Z students, their mental health awareness, future planning abilities, and strategies to cope with educational and life challenges.

During the three main training days, topics such as mental wellness improvement, emotional regulation, deep questioning skills, and awareness of various psychological conditions were thoroughly discussed.

Specific sessions covered key mental health issues, including:

  • Depression
  • Bipolar Affective Disorder
  • Schizophrenia
  • Dementia
  • Substance Use Disorders
  • Female Mental Health
  • Autism Spectrum Disorders

Additionally, practical training was offered on stress management, resilience building, mental health protection, and enhancement of learning abilities.

The overall goal of the workshop was to equip educators and trainers with the psychological insight and empathy required to support students effectively in both academic and personal growth, ensuring that career education becomes more inclusive, compassionate, and mentally empowering.