இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவித்துள்ளது.
மேலும், சீன மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியின் வருமானமும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பை (GOR) அதிகரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 2024 ஆம் ஆண்டு இதுவரை உள்நாட்டு சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.